விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய லப்டொப் கணனி மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
குறித்த லப்டொப் கணனியுடன் பெருந்தொகைப் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கணனியில் அரசியல் பணிமனையில் காணப்பட்ட இரகசிய தகவல்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த லப்டொப் கணனியும், பணமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. |
புதன், 1 டிசம்பர், 2010
தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய கணனி முள்ளிவாய்க்காலில் மீட்பு: லக்பிம தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக