வியாழன், 2 டிசம்பர், 2010
ஆர்ப்பாட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் தொடர்பில் உரிய விசாரணை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். எனினும் அதில் கலந்துகொண்டாரா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின்போது பெருந்திரளான பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கலந்துகொண்டதாக ஆளும் தரப்பினர் குற்றம் சுமத்தினர். இதனால் இன்று காலை நாடாளுமன்றில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர், ஜயலத் எம்.பி இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்திருப்பதால் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக