Mukinthan Thurairajasingham : ஈரான் மீதான தாக்குதலை ட்ரம்ப் திடீரென ரத்து செய்தது ஏன்?
ஜனவரி 2026. மத்திய கிழக்கு நாடுகள் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்றிருந்தன. அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரான் மீது பாயத் தயாராக இருந்த அந்த நொடியில், ஒரு ட்வீட் (Tweet) உலகையே திகைக்க வைத்தது.
“I greatly respect the fact that all scheduled hangings, which were to take place yesterday, over 800 of them, have been canceled by the leadership of Iran. Thank you.”
வெறும் 800 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்காகவா ட்ரம்ப் ஒரு ராணுவத் தாக்குதலையே நிறுத்தினார்?
இல்லை, உட்மையில் இதற்குப் பின்னால் இருப்பது உலக நாடுகள் ஆடிய ஒரு மிக அபாயகரமான உளவுத்துறை விளையாட்டு.
இந்தக் கதையின் ஆரம்பம் ஈரானில் இல்லை, டென்மார்க்கில் (Denmark) இருக்கிறது. ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். "வேண்டியதை நல்ல முறையில் கொடுங்கள், இல்லையென்றால் பலவந்தமாக எடுப்போம்" என்று அவர் டென்மார்க்கை மிரட்டியது நேட்டோ (NATO) கூட்டணியையே சிதைக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.
இந்த அவமானத்தால் கொதித்துப்போன டென்மார்க் உளவுத்துறை (DDIS), அமெரிக்காவை நிலைகுலைய வைக்க ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த மொசாட் (Mossad) ஏஜென்ட்கள் பற்றிய ரகசியப் பட்டியலை அவர்கள் ஈரான் வசம் ஒப்படைத்தனர்.
சிம்பிள் தமிழில் சொல்வதானால் அனைத்து மொசாட் ஏஜென்ட்களின் விபரங்களும் டென்மார்க் உளவுத்துறையால் ஈரானுக்கு “காட்டிக் கொடுக்கப்பட்டது.
டென்மார்க் கொடுத்த அந்தத் தகவலை வைத்து ஈரான் அதிரடி வேட்டையில் இறங்கியது. போராட்டக் கூட்டங்களுக்குள் மறைந்திருந்த மொசாட் உளவாளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தத் தயாரானபோது, ஈரான் ஒரு ரகசியச் செய்தியை (Cable) மொசாட் தலைமையகத்திற்கு அனுப்பியது:
"நீங்கள் எங்களைத் தாக்கினால், எங்கள் வசம் சிக்கியுள்ள ஒவ்வொரு மொசாட் ஏஜென்ட்டையும் நாங்கள் பொதுவெளியில் தூக்கிலிடுவோம்."
மொசாட் ஏஜென்ட்கள் என்பவர்கள் வெறும் வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இஸ்ரேலியக் குடும்பங்களின் பிள்ளைகள்.
தங்கள் நாட்டு வீரர்கள் ஈரானியத் தொலைக்காட்சிகளில் நேரலையாகத் தூக்கிலிடப்படுவதை இஸ்ரேல் மக்களால் ஜீரணிக்க முடியாது.
இது இஸ்ரேலுக்குள் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்கும்.
உடனே மொசாட் அதிகாரிகள் ட்ரம்பிற்கு அவசர அழைப்பு விடுத்தனர். "தாக்குதலை இப்போதே நிறுத்துங்கள்! (Abort, Abort!)" என்று அவர்கள் கதறினர்.
வேறு வழியின்றி, தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள ட்ரம்ப் ஒரு கதையை உருவாக்கினார்.
ஈரான் 800 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ததால் தான் மனமிரங்கி தாக்குதலை நிறுத்தியதாக உலகுக்குச் சொன்னார்.
ஆனால் உண்மை என்னவென்றால், கிரீன்லாந்திற்காக அவர் டென்மார்க்கை மிரட்டிய அந்த 'அவசரக்குடுக்கி'த் தனம், இறுதியில் அமெரிக்காவின் உற்ற நண்பனான இஸ்ரேலின் உளவாளிகளை ஈரானிடம் பலிகொடுக்கப் பார்த்தது.
வரலாற்றில் இது ஒரு விசித்திரமான அத்தியாயம். ஒரு நாட்டின் நிலப்பரப்பிற்காக (Greenland) ஆசைப்பட்ட ஒரு வல்லரசுத் தலைவர், தன் கூட்டணியில் இருந்த நாடுகளையே பகைத்துக்கொண்டார்.
அதன் விளைவாக, தன் உளவுத்துறை ரகசியங்களை இழந்து, இறுதியில் ஈரான் நாட்டின் முன்னால் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இப்பொழுது தெரிகிறதா ட்ரம்ப் யாருடைய “கைப்பாவை”என?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக