புதன், 1 டிசம்பர், 2010
புலிகள் பதுங்கிய இடத்தில் யானைகள்
யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் யுத்த தளமாக காணப்பட்ட முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வனவிலங்கு தேசிய பூங்கா ஒன்றினை அமைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வனவிலங்கு தேசிய பூங்காவானது மனிதருக்கும் யானைகளுக்கும் இடையில் காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழியாக அமையும் எனவும் சுமார் 100000 ஏக்கர் பரப்பில் இந்த வனவிலங்குத் தேசிய பூங்கா அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பல பிரதேசங்களில் யானைகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதும் மக்களைத் தாக்கும் நிலை காணப்பட்டு வருவதனாலேயும் இத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் 1900 ஆம் ஆண்டில் 12000 யானைகள் காணப்பட்டதாகவும் தற்போது 4000 யானைகளே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக