வியாழன், 2 டிசம்பர், 2010

தொண்டராசிரியரொருவர் மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார்

ஏழு சிறுமிகளிடம் பாலியல் குற்றம்செய்தார் என்ற தொண்டராசியருக்கு பிணை வழங்க வேண்டாம் : ஹட்டனில ஆர்ப்பாட்டம்!

தரம் ஐந்தில் கல்வி கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தொண்டராசிரியருக்குப் பிணைவழங்க வேண்டாமெனக்கோரி இன்று ஹட்டன் நகர சபையின் முன்றலில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று இடம்பெற்றது.

டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவர் சந்தேகத்தின் பேரில் கடந்த 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு அட்டன் நீதிமன்றில் நோட்டன் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
அவரை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்தச்சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது இவருக்குப் பிணை வழங்க வேண்டாமெனக்கோரியும் இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தமிழ் பாடசாலைகளில் இனிமேலும் இடம் பெறக்கூடாது என்று வலியுறுத்தியும் பெற்றோர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சந்தேக நபரை இன்று அட்டன் நீதிமன்றில் ஆஜபடுத்திய போது அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: