dinaseval.com சபரீசன் SLEEPER CELL ஆதவ் அர்ஜுனா... நம்பி மோசம் போன விஜய்... சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்...
விஜயின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிடும் பரிதாபத்தில் இருக்கிறது. குறிப்பாக விஜய் முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜனா கட்டுப்பாட்டிற்குள் வந்ததின் காரணமே விஜயின் அரசியல் வாழ்க்கையை கச்சிதமாக முடிவுக்கு கொண்டு விட்டார் ஆதார் அர்ஜுனா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த பின்பு தொடர்ந்து விஜயை எப்படியாவது NDA கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என எடப்பாடி தரப்பும், அமித்ஷா தரப்பும் தொடர்ந்து விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது ஆதவ் அர்ஜுனா தான் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக விஜய் NDA கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி பெற்று தருகிறோம் என அமித்ஷா பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய போது, கிட்டதட்ட விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வந்துவிடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக கூட்டணிக்குள் சென்றுவிட்டால் த வெ க, அதிமுக - பாஜகவுக்கு கீழ் தான் இருக்க முடியும் ஆனால் விஜய்யை முதலமைச்சராக முன்னிறுத்து பாஜக உடன் செல்லாமல் நம்முடைய தலைமையில் கூட்டணி அமைப்போம் என விஜய்யிடம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா.
மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் போன்றவை நம்முடன் கூட்டணிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள், ஆகையால் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் மற்ற கட்சிகள் நாம் பத்தோடு பதினொன்றாக மாறி விடுவோம் என்று ஆதவ அர்ஜுனா விஜய்க்கு NDA கூட்டணிக்கு செல்லவிடம் முட்டுக்கட்டை போட, காங்கிரஸ் நம்முடன் கூட்டணிக்கு வந்து விடுவார்கள் அவரை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்து விடும்.
மேலும் ஆதவர் அர்ஜுனா மிகப்பெரிய விஜய்க்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் நமது கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் அவர்களைத் தொடர்ந்து தேமுதிகவும் வந்துவிடும். அந்த வகையில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது நம்ம தான் நீங்க தான் முதலமைச்சர் என்றெல்லாம் ஆதவர் அர்ஜுனா விஜய்யை உசுப்பேத்தி விட்டு பாஜக கூட்டணிக்கு செல்லாமல் தடுத்திருக்கிறார்.
ஆனால் நடந்ததோ வேறு டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து விட்டார். அவரை தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் என் டி ஏ கூட்டணிக்கு வர இருக்கிறார் மறுபக்கம் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் விஜய் பக்கம் சென்று விடுவோம் என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தங்களுடைய தொகுதியை அதிகரிக்க தான் செய்கிறார்கள் தவிர, திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர அவர்கள் தயாராக இல்லை.
இப்படி ஒரு சூழலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்தால்,காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருவதாக எடப்பாடியிடம் உறுதியளித்திருக்கிறார் ஆதவா அர்ஜனா, இதை நம்பி பாஜக கூட்டணியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து கடைசியில் யாரும் கூட்டணிக்கு வராமல் மோசம் போனதுதான் மிச்சம்.
அதே பார்முலாவை தான் தற்பொழுது விஜயையும் காலி செய்ய ஆதாவ் அர்ஜுனா திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், குறிப்பாக தாவெகாவிற்கு ஆதவர்ஜுனாவை சிலிப்பர் செல்லாக அனுப்பி வைத்ததே ஆதார்ஜுனாவின் நெருங்கிய நண்பரும் முதல்வரின் மருமகனுமான சபரீசன் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக