வெள்ளி, 3 டிசம்பர், 2010

திருவண்ணாமலை பாத்ரூம், டாய்லெட் வசதி கிடையாது குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு விடுதிகளும் கிடையாது

திருவண்ணாமலை கோபுரங் களுக்கு இந்த லேசர் லைட்டுகள் அவசியமில்லை'


கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருஅண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பேக் கோபுரம், திருமஞ்சனக் கோபுரம் ஆகிய 4 கோபு ரங்களிலும் தலா 4 லேசர் லைட் பொருத்தியிருந்தார்கள். ஒவ்வொரு லேசர் லைட்டும் 4500 வாட்ஸ் பவர். அந்த விளக்குகள் ஜொலித்த 3 இரவுகளும் ஏதோ சித்திரை மாத நண்பகல் போல வெளிச்சம் பளிச்சிட்டது. இந்த 16 லேசர் விளக்குகளையும் ஏற்பாடு செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஐந்தாம்நாள் ""திருவண்ணாமலை கோபுரங் களுக்கு இந்த லேசர் லைட்டுகள் அவசியமில்லை'' என்று ரஜினிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ம.தி.மு.க. மாணவரணி மாநில துணைச்செய லாளர் பாசறை பாபு.

"பாசறை பாபு'வை சந்தித்து அந்தக் கடிதத்திற்கான அவசியம் குறித்து கேட்டோம்.

""லேசர் விளக்கு வெளிச்சம் நம்ம உடம்பை பாதிக்கும்கிறது விஞ்ஞான ஆய்வின் முடிவு. கோபுரத்திற்கும் ஆபத்து ஏற்படும். கோபுரங்களில் வசிக்கின்ற புறாக்கள், கிளிகள், மைனாக்கள், குருவிகள், பருந்துகள் எல்லாத்துக்கும் பாதிப்பு ஏற்படும். அழிந்துகொண்டிருக்கும் பறவையினத்தை "லைட்' போட்டுக் கொல்ல வேண்டாம்னு தான் சூப்பர் ஸ்டாருக்கு கடிதம் எழுதினோம். இந்த லேசர் லைட்டுகளை அமைத்துத் தருவதற்கு எப்படியும் 25 லட்ச ரூபாய் செலவாகுமாம். பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கில் தினமும் ஆயிரக்கணக்கில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாத்ரூம், டாய்லெட் வசதி கிடையாது. குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு விடுதிகளும் கிடையாது. ரஜினிகாந்த் இந்த உதவிகளைச் செய்து கொடுத்தால், காலா காலத்திற்கும் ஏழை பக்தர்கள் நன்றி சொல்வார்கள். பெரும் புண்ணியமாகும். இதை ரஜினி பரிசீலனை செய்யணும்னுதான் கடிதம் எழுதினோம்'' என்றார் பாசறை பாபு.

இந்து அமைப்புகளோ ""இந்த விளக்குகளால் கோயில் பிரபலமாகும். லேசர் லைட் வரவேற்க வேண்டிய விஷயம்'' என்கின்றன.

இதுபற்றி கோயில் இணை ஆணையர் தனபாலிடம் கேட்டோம்.

""நடிகர் ரஜினியின் ராகவேந்திரா டிரஸ்ட் சார்பில் அனுப்பிய கடிதத்தை நடிகர் மயில்சாமி கொண்டுவந்து தந்தார். அதில் லேசர் விளக்குகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்கள். இதனால் பாதிப்பு வருமா? என்று அண்ணா பல்கலை மற்றும் ஐ.ஐ.டி.யிடம் ஆய் வறிக்கை கேட்டுள்ளோம். ஏனென்றால் புராதன சின்னங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடா தல்லவா?'' என்றார் கோயில் இணை ஆணையர்.

லேசர் விளக்குகள் வேண்டுமா? வேண்டாமா? என்ற பட்டிமண்டப விவாதம் கிளம்பியிருக்கிறது அருணாச்சலேஸ்வரர் திருத்தலத்தில்.

கருத்துகள் இல்லை: