சனி, 4 டிசம்பர், 2010

மஞ்சுளா கண்ணீர்: நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவள்:


பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த நான் எம்ஜிஆர் சிவாஜியுடன் நடித்து புகழ் பெற்றவள். எனக்கு பிறந்த வனிதா மகளே அல்ல. ராட்சஷி என்றார் நடிகை மஞ்சுளா.

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகுமார் தனது மனைவி நடிகை மஞ்சுளாவுடன் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 
மஞ்சுளா கூறியதாவது,

வனிதாவை என் வயிற்றில் சுமந்து பெற்றதற்காக வெட்கப்படுகிறேன். அவள் முதலில் ஆகாசை காதலிப்பதாக கூறினாள். அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம்.
2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆகாசுடன் தகராறு செய்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவருடன் வாழமாட்டேன் என்றாள். நாங்கள் அவளை சமாதானப்படுத்தினோம். குடும்பம் என்றால் தகராறு வரத்தான் செய்யும். நாம்தான் அனுசரித்துப்போக வேண்டும் என்று அறிவுரை கூறினோம்.
ஆனால், எங்களுக்கு தெரியாமலே அவள் விவாகரத்துக்கு மனு செய்து இருக்கிறாள். ஒரு வருடம் கழித்து,  ஆன் லைன்' மூலம் ஆனந்தராஜை காதலித்து, திருமணமும் செய்துகொண்டாள்.
என் கணவருக்கு 2 மனைவிகள் இருக்கிறோம். இரண்டு பேர் மூலமும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரிதான் அன்பு செலுத்தி வருகிறோம். மூத்த மனைவி பிள்ளைகள், இளைய மனைவி பிள்ளைகள் என்ற பேதம் எங்களுக்குள் இல்லை. வனிதா ஒருத்திதான் இப்படி ஆகிவிட்டாள். அவளை என் பொண்ணு என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன்.
நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். எம்ஜிஆர் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவள். எனக்கு பிறந்த வனிதா மகளே அல்ல. ராட்சஷி.

ரஜினி என்னிடம் பேசியபோது, அவரவர்கள் செய்த கரும வினைபடிதான் எல்லாம் நடக்கும். அந்த கரும வினைதான் வனிதா வழியில் நடக்கிறது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கேற்ப வனிதா செய்யும் தவறுக்கு தெய்வம் கண்டிப்பாக தண்டனை கொடுக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை: