தமிழ் பொதுமக்கள் போரின் இறுதிக் கட்டத்தின் போது அதன் தாக்கத்தால் துளைத்து நசுக்கப் பட்டார்கள்.
- ஆக்கம்: சேர்ஜி டீசில்வா—ரணசிங்க
பிதா றோகான் சில்வா ஒரு மதிப்புமிக்க கத்தோலிக்கப் பாதிரியார் ஆவார், அவர் தான் தலமையேற்று நடத்தும் ஒரு கத்தோலிக்க கருணைத் தாபனமான சமூக மற்றும் சமய நிலையத்தினூடாக ஸ்ரீலங்காவில் வாழும் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையே நல்லுறவுப் பாலம் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவரது பணியானது உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் அவதியுறும் தமிழ்பொதுமக்களை அதிலிருந்து மீட்சியுற வைக்க உதவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை நிர்வகிப்பதாகத் தோன்றுகிறது. அவர் முன்பு இந்த வருட ஜூன் மாதத்தில் சேர்ஜி டீசில்வா—ரணசிங்கவுக்கு கூறியிருப்பது, போரின் கடைசி மாதங்களின்போது அதன் இடையே சிக்கித் தவித்த தமிழ் பொதுமக்களின் மறுதாக்கங்கள், உள்ளக இடப்பெயர்ச்சிக்கு ஆளான மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிலை மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்து ஆட்கள் புகலிடம் தேடி ஓடுவதை முன்னிலைப் படுத்தும் காரணிகள் என்பவைகளைப் பற்றி.
பொதுமக்களின் தர்மசங்கடமான நிலை
ஸ்ரீலங்காவின் பிரிவினைவாத உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் கடைசி மாதங்களில்; தமிழ்குடிசனப் பரம்பல் போரின் தன்மையான மனிதப் படுகொலை அவலங்களின் தாக்கத்தினால் துளைக்கப் பட்டது. அது மக்கள் தாக்குதலின் இடையே சிக்கிக் கொண்டதினால் நிகழ்ந்த கூடுதல் விளைவாகும். தமிழ் குடிமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கித் தப்பியோடும் போது சுடப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாகத் தடுக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகவோ அல்லது கட்டாய படைத்துறைப் பணிக்கு பலவந்தமாக சேர்க்கப்பட்டோ வந்தார்கள்.பொதுமக்களின் மரணங்களின் எண்ணிக்கை இதுவரை சரியாக மதி;பிடப்படாது போனாலும் பொதுவாக அது பல ஆயிரங்களைக் கடந்திருக்கும் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என நம்பப் படுகிறது.
பிதா.றோகான் டீ சில்வா: “ மிகவும் அக்கறையுள்ளதாகத் தோன்றுவது தமிழீழ விடுதலைப் புலிகளினால் இதுவரை மறுகிளர்ச்சி நடவடிக்கைகள் எதுவும் ஏற்படாதது.எ னவே யுத்தம் முடிவடைந்து விட்டதான ஒரு உணர்வு மக்களிடையே காணப்படுகிறது. முழுதான ஒரு வருடத்தினுள்ளும் நாங்கள் எதைப்பற்றியும் கேள்விப் படவில்லை. எனவே ஒருவர் நிச்சயம் சொல்லுவார், அவர்களுடன் போராட எந்தக் காரணமும் இனி இல்லை. இப்போது மக்கள் எந்தவித அச்சமுமின்றி ஒரு பேரூந்தில் ஏறி மற்றவர்களது பிரயாணப் பைகளை சந்தேகத்தோடு நோட்டமிடாதபடி நினைத்த இடத்துக்குப் போகலாம், அதனுள் ஏறும் தமிழர் ஒருவர் உடனடி சந்தேகத்துக்கு ஆளாக மாட்டார் என்று. மக்கள் மிகவும் ஆசுவாசத்தோடு காணப்படுகிறார்கள். அந்தப் பெருமை அரசாங்கத்துக்குச் சேரவேண்டியது. பயங்கரவாதிகளோடு போராடத்தான் வேண்டும் என்று யாராவது சொல்லலாம். நாங்கள் அதை நியாயப் படுத்தப் போவதில்லை. அரசாங்கம் அதைக் கையாளட்டும்.”
“ நான் நினைக்கிறேன் கடைசி நாளான மே 18 ந்திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அந்தக் கடைசி நேரத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகம் இதில் தலையிடும் என நினைத்தார்கள். ஏனெனில் வேறு வழி ஒன்றும் இருக்கவில்லை. துல்லியமான அந்தக் காரணத்தால் அரசாங்கம் அங்கு 300,000 மக்கள் இல்லை என அறிவித்தது. இல்லாவிட்டால் அது ஒரு சர்வதேசப் பிரச்சனையாக மாறிவிடும். அவர்கள் புள்ளிவிபரங்களோடு விளையாடினார்கள். அவர்கள் சொன்னது அது ஒரு 100,000 – 150,000 மக்களின் பிரச்சனை மட்டுமே என்று. அது உண்மையில்லை.
ஏனெனில் முழுக்கூட்டமும் அங்கிருந்து நகர்ந்தபோது அவர்களை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இறுதியாக அது 280,000ல் வந்து முடிந்தது. அது முன்னதாக வந்தவர்களையும் சேர்த்துள்ள தொகை. இவர்கள் மட்டும்தான் உயிர் பிழைத்தவர்கள். எத்தனை பேர் மரணமானார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் உண்மையாக நாங்கள் அதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். குறைந்தது ஒரு கத்தோலிக்கனின் கண்ணோட்டத்தில் தேவாலயங்கள் அவர்களின் பதிவுகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாக ஒரு பங்குக் குருவானவுருக்கு தனது பங்கில் எவ்வளவு மக்கள் இருந்தார்கள் என்பது நன்கு தெரியும். பங்குகள் யாவும் மீளவும் கட்டமைக்கப் படும்போது எத்தனை பேரைக் காணவில்லை என்பதை அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்வார்கள்.
உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலமைகள்
உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலமைகள் வெறும் உத்தேச மதிப்பிலேயே கையாளப்பட்டன. ஏனெனில் ஸ்ரீலங்கா அதிகாரிகள ;அந்தச் சவாலை மிகவும் நெருக்கடியான நிலைகளுக்கு மத்தியிலேயே கையாள முற்பட்டார்கள். ஏனெனில் 240,000க்கு மேற்பட்ட மக்களை உள்நாட்டு யுத்தத்தின் இறுதியான நான்கு வாரங்களில் யுத்தப் பிரதேசங்களில் இருந்து உள்வாங்கியதுடன் ஏற்கனவே 40,000 க்கு மேற்பட்ட மக்கள் முன்னதாக 2009 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அங்கு வந்திருந்தார்கள். இந்தக் கட்டத்தில் இடம் பெயர்ந்தோர் முகாம்களில தங்கியிருந்த குடிமக்களின் பரிதாப நிலையினையும் சிக்கல் நிறைந்த பிரமாண்டமான மனிதாபிமான இடருதவிப் பணிகளில் செயலாற்றிய பிதா.றோகான் டீ சில்வாவின் தனிப்பட்ட அனுபவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.
பிதா.றோகான் டீ சில்வா: “முதலில் உள்ளக இடம் பெயர்ந்தோர்; பாடசாலைகளிலும் மற்றும் எங்கெல்லாம் தங்க வைக்கச் சாத்தியப்படுமோ அப்படியான இடங்களுக்கு நகர்;த்தப்பட்டார்கள். ஆனால் உள்ளக இடம் பெயர்ந்தோர் தொகை அதிகரிக்கத் தொடங்கியதும், அதிகாரிகளுக்கு மேலும் அதிக இடங்களை முகாம் அமைப்பதற்காக சுத்திகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அவ்வளவு பெரிய தொகையினை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் அவர்கள் மிகவும் அடிப்படைத் தேவையான சாதனங்களை மட்டுமே வழங்கி வந்தார்கள், ஆனால் தண்ணீர், உணவு. மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ஒரு இருப்பிடத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களோ அதற்கு மேலோ ஆன காலம் எடுத்தது. தேவாலய அமைப்புக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்ட போதும், அநேக அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கே செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதனால்தான் எங்களுக்கு அங்கே செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
ஆரம்பத்திலிருந்தே உட்செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப் படடிருந்தது. ஆனால் எங்களால் மக்களுடன் பேசுவதற்கு மட்டுமே இயலுமாயிருந்தது. பணிகளைப் பொறுத்த மட்டில் கரித்தாஸ் நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்றிருந்தது. ஆனால் அதுவும் துணை உதவிகள் போன்ற குறிப்பிட்ட சில விடயங்களில் மட்டுமே. பிற்பாடு ஓரளவு சிறுவர்களுக்கு கல்வியைத் தொடர சிறிய பாடசாலைகளை ஆரம்பிக்க அனுமதி கிடைத்தது.
ஆனால் அதற்குப் பிறகு அதிகாரிகளுக்கு உதவிகள் தேவையாயிருந்தது. அதனால் அவர்கள் தேவாலயங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள., அப்படித்தான் தேவாலயங்கள் இதில் சம்பந்தப் பட்டன.எல்லா பங்குப் பிரிவுகளும் ஒழுங்கு செய்து மக்களுக்குத் தேவையான உணவுகளைச் சமைத்து முகாம்களுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் அரச இராணுவத்தினுடாகவே செல்ல வேண்டியிருந்தது.பிறகு படிப்படியாக அரசாங்கமும் உலக உணவுத் திட்ட நிறுவனமும் பங்கு பெற ஆரம்பித்தன. ஐ.நா வும் ஈடுபடத் தொடங்கியது. அதன் பிறகும் அவர்களுக்கு மரக்கறி வகைகள் (அதை கரித்தாஸ் வழங்க வேண்டியிருந்தது) பாத்திரங்கள். தண்ணீர் போன்ற ஏனைய பொருட்கள் தேவையாக இருந்தன. அங்கே வேண்டியிருந்த அநேக தேவைகளை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியாமலிருந்தது. அதனால் அதைச் செய்வதற்கு தகுதி வாய்ந்த ஏனைய குழுக்களை அழைத்தார்கள்.
இறுதி நாட்களான மே 17 மற்றும் 18ந்திகதிகளில் மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அது கிளிநொச்சியிலிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருந்தது அங்குதான் அவர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்து ஏ-9 வீதி வழியாக அழைத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அதுதான் பாதுகாப்பான பயணப் பாதையாகவிருந்தது. வலய இலக்கங்கள் நான்கு மற்றும் ஐந்துக்குள்ளே தான் கடைசித் தொகுதி உள்ளக இடம் பெயர்ந்தோர் அனுப்பி வைக்கப் பட்டனர். ஏராளமான நிகழ்வுகள் அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தேறின. வந்து சேர்ந்தவர்களில் யார் யார் புலிகளோடு தொடர்பு கொண்டவர்களென இராணுவத்தால் கூடச் சரியாக நிச்சயிக்க முடியாமலிருந்தது.இந்தக் கூட்டத்துக்குள்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி பெற்ற போராளிகள் இருக்கக் கூடும் என்பதில் அரசாங்கம் முடிவுவரை உறுதியாக இருந்தது. அதனால்தான் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டன.
இடம் பெயர்ந்தோர் இறுதி வலயத்துக்குள் அழைத்து வரப்பட்டதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதுடன். அவர்கள் உள்வந்ததும் அனுமதியற்ற ஒரு விசேட வலயத்தினுள் அடைக்கப் பட்டார்கள். என்ன நடந்தது என்றால் முதலாவது குழுவுக்கு அனுமதிக்கப் பட்ட வசதிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழுக்களுக்கும் பெற முடிந்தது, ஆனால் நாலாவது மற்றும் ஐந்தாவது குழுக்களுக்கு அதை ஒழுங்கு செய்ய காலம் தேவையாக இருந்தது. ஆனால் மாதங்கள் செனறதும் உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் அபிவிருத்தியடைந்தன.”
“மே மாதத்திலிருந்து ஜூலை முடிவு வரை அல்லது அதற்குப் பிறகு வரை நாலாவது மற்றும் ஐந்தாவது வலயங்களுக்கு முழு அளவிலான வழி மறுக்கப் பட்டிருந்தது. வழி என்பதன் கருத்து யாதெனில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன என்றாலும் வெளியாட்கள் உள்ளே சென்று உதவிகளைச் செய்ய முடிந்தது. எல்லோராலும் உள்ளே சென்று விட முடியாது. சில குறிப்பிட்ட குழுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு முன் அனுமதி பெற்றிருந்தாலே உள்நுழைய முடியும் அதுவும் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே. அவைகள்தான் கட்டுப்பாடுகள் என்றாலும் அதன் பொறுப்பதிகாரி சிலசமயங்களில் இரக்க மனமுள்ளவராக இருந்தால் நீங்கள் மேற்கொண்டும் செல்ல அனுமதிக்கப் படுவீர்கள். ஒருமுறை நீங்கள் உள்நுழைந்து விட்டால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று யாருக்குமே தெரியாது.
அது மிகப் பெரிய ஒரு இடம்,நாங்கள் இந்த வழிகளின்படியே மக்களைச் சந்திந்தோம்.மாதததுக்கு மாதம் உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலமைகள் விருத்தியாகிக் கொண்டே போனது. ஆரம்பத்தில் உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்களில் சில சுகவீனங்கள் உண்டானாலும் பின்னர் அது சீரானது. தீவிரமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் காத்ததுக்கு ஆண்டவனுக்கு நன்றி கூறவேண்டும்.”
“உள்ளக இடம் பெயர்ந்தோர்; நீங்கள் யாரென்று தெரியாவிட்டால் எதையும் பகிரங்கப் படுத்த மாட்டார்கள். அவர்கள் மிகவும் மௌனமாகவே இருப்பார்கள். வழமையாக உள்ளே சென்று வரும் குழவாக நாங்கள் இருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிலவற்றை கேள்வியுற எங்களுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் பிடித்தன. அந்த வகையில் அரசாங்கம் செய்தது சரி என்றே நான் எண்ணுகிறேன், ஏனெனில் சில பிரபலமான மாவீரர் குடும்ப அங்கத்தினர்கள் அந்த இறுதிக் குழுவில் இருந்தார்கள். மேலும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை (இருந்த போதிலும் இப்போது சிலர் அங்கு உயிர்வாழ தாங்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் என்பதை வாய்திறந்து பேசுகிறார்கள்) ஏனெனில் அவர்களின் பிரதான கவலை தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே.
என்னால் நிச்சயமாகக் கூறமுடியும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் சுனாமி அனர்த்தங்களின் பின்விளைவுகளின் போது உதவிபுரிந்ததைப் போன்று இந்தச் சந்தர்ப்பத்திலும் உதவிகளைச் செய்ய ஆர்வமுள்ளனவாகவே இருந்தன. மேலும் பல துர்துவராலயங்களில் பணமிருந்த போதும் அவைகளுக்கான வழிகள் அனுமதிக்கப் படவில்லை. ஏனெனில் அரசாங்கம் கட்டுப்பாடுகளில் கவனமாக இருந்தது. சகலமும் கூர்ந்து ஆராயப்பட்டது. கரித்தாஸ் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்கள் வீடுகளைக் கட்டவும் இன்னும் பலவற்றுக்கும் அனுமதிக்கப் பட்டார்கள். ஆனால் அவர்கள் தரப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் வேலை செய்யவேண்டியிருந்தது. அங்கு செலவிடப் படும் பணத்துக்கும் அங்குள்ள ஆட்களுக்கம் கணக்குக் காட்ட வேண்டியிருந்தது.”
“மீள் குடியமர்வு நடவடிக்கைகள் பெருமளவில் கண்காணிக்கப் பட்டன. முதலில் மக்கள் சொன்னார்கள. ”எங்களை வீடுகளுக்குப் போக அனுமதியுங்கள. ,மூன்று மாதங்களுக்குள் நாங்கள் மீண்டும் பழையபடி வந்து விடுவோம்” என்று. ஆனால் ஒருமுறை அவர்கள் அங்கு போனதும் கண்ட காட்சி வெறும் அழிவுகளை மட்டுமே. இந்தக் கீறல்களிலிருந்துதான் தங்கள் வாழ்க்கையை மீளமைக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். மீள் குடியமர்வு நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன. அரசாங்கம் கூறுவது அங்கே நிலக் கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதால் மக்களைத் திருப்பி அனுப்ப முடியாது என்று. உண்மையில் மக்களை அங்கு கொண்டு சென்றால் அவர்கள் வாழ்வதற்கு எதையும் காண முடியாது. அவர்களுக்கு சிறிதளவு பணமும் பங்கீட்டு உணவுப் பொருட்களையும் மட்டும் வழங்கி தங்களின் சொந்த வழியைத் தேடிக் கொள்ளும்படி எதிர்பார்க்கப் படுகிறது. அவர்கள் சொல்வது வேறு எந்த வசதியுமே அங்கில்லை. அதற்கு மேலதிகமாக சுற்றிலும் பலமான ஆயதம் தாங்கியவர்களின் பிரசன்னமே காணப்படுவதாக.”
புகலிடம் தேடுவோர்கள்
பிதா றோகான் சில்வாவின் உத்தேசக் கருத்தின்படி வழங்கப் படுவது,ஸ்ரீலங்காவின் உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழ் புகலிடம் தேடுவோர்களைப் பற்றிய உண்மையான உள் நடத்தைகளை பற்றிய சிக்கலான பிரச்சனைகளையும, அதன் வேறுபட்ட உந்துதல் காரணிகளால் உலகின் பலபாகங்களிலுள்ள நாடுகளிலும்; ஸ்ரீலங்காவிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிகரித்து வரும் சம்பவங்களைப் பற்றியதும்.
பிதா.றோகான் டீ சில்வா தொடர்ந்து கூறுவது: “ முகாம்களிலிருந்து தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை அந்தளவு அதிகமாக இருக்கும் என்று நான் எண்ணவுpல்லை. மிகவும் ஆச்சரியமான முறையில் கம்பி வேலிக்கூடாக ஒரு முழுக் குடும்பமுமே தப்பித்த விடயம் எனக்குத் தெரியும், அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றும் விட்டனர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பெரும் புள்ளி வெளியேறினார் அடுத்த நாளே அவர்கள் சொன்னார்கள் அவர் இந்தியாவிலிருந்து தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாக. நான் உணர்வது என்னவென்றால் இந்த முகாம்களிலிருந்து தப்பியோட நினைப்பவர்கள்,நாட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடனேயே இருப்பார்கள், ஏனெனில் இங்கிருந்தால் ஏதாவது ஓரிடத்தில் அவர்கள் பிடிபட்டு விடலாம் என்கிற அச்சம் அவர்களிடமிருக்கும்.அவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பம் மூலமாகவோ, வேறுவகையிலோ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு இணைப்பைக் கொண்டிருந்தார்கள். அந்த வழியில் ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ போயிருக்கக் கூடும். ஆனால் அந்த வகையான ஆட்கள் பணமோ அல்லது செல்வாக்கோ கொண்டவர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த முகாம்களில் எஞ்சியிருந்த எல்லாருமே எதுவுமே செய்ய இயலாதவர்கள். எதையாவது செய்யக் கூடிய அதிகாரம் படைத்தவர்கள் எல்லோரும் எப்போதோ போய்விட்டார்கள்.”
“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உண்மையான தொடர்புள்ளவர்கள் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறத்தான் வேண்டும். இல்லையெனில், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படக்கூடும். அநேகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தடுப்புக் காவல் முகாம்களில் உள்ளார்கள். ஏனெனில் சிறிய சந்தேகத்துககுக்; கூட அவர்களை வருடக்கணக்கில்; சிறையில் போடக்கூடும். அவர்களுக்கு அவர்களின் தலைவிதியைப் பற்றி நன்கு தெரியும், எனவே அவர்களின் சிறந்த தெரிவு நாட்டை விட்டு வெளியேறுவதுதான். ஆமாம் நாட்டை விட்டு அவர்கள் வெளியேறியதும், அவர்கள் சொல்வது அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும். அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள். உயர் மட்டத்தினர் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்திருக்கக் கூடும். சர்வதேசத் தொடர்புகள் அவர்களுக்கு இருந்தாலன்றி, ஒரு சாதாரண போராளியால் வெளிநாடு செல்ல முடியாது. எங்களிடம் ஆதாரங்கள் இல்லை, இவையாவும் நாங்கள் கேள்விப் பட்டவைகள்தான். சில தமிழ் அரசியல் குழுக்கள் உள்ளக இடம் பெயர்ந்தோர்; முகாம்களுக்கு வருகை தந்த போது அவர்களுக்கு யார் தமிழீழ விடுதலைப் புலிகள் என அடையாளம் தெரிந்திருக்கும், ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது சுலபமாக இருந்திருக்கும். அநேகமாக இந்தக் குழுவினர் அவர்களுடன் ஒரு பேரம் பேசலை நடத்தியிருக்கலாம் “ நீங்கள் வெளியேற வேண்டுமாயின் இதுதான் விலை. இதைத் தரமுடியுமாயின் நிச்சயமாக கரைக்கு வெளியே கொண்டு சென்று விடப்படுவீர்கள்.” என்று”
“ஆனால் சிலர் நினைத்திருக்கக் கூடும் அவர்கள் இங்கிருந்து சுற்றித் திரிவதை விட நாட்டை விட்டு வெளியேறி விட்டால் இரு பகுதியினருக்கும் நல்லது என்று. நான் நினைக்கிறேன் அந்தக் கட்டத்தில் பிரதானமான காட்சி முகாம்களை விட்டுத் தப்பி வெளியேறுவதுதான் என்று. எனவே அந்தக் கணத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்கள் அப்படிச் செய்தார்கள். அங்கே மீதமாக இருப்பவர்கள் திரும்பிச் சென்று தங்கள் வாழ்க்கையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும். அவர்களால் வெளிநாடு செல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு தாங்கு தணலாக அங்கே யாருமில்லை.யாராவது அவர்களுக்கு அனுசரணை வழங்குவதற்கு தயாராக இருந்திருந்தால் சந்தேகமின்றி அவர்களும் அந்த வாய்ப்பினை பயன் படுத்தியிருப்பார்கள். அனுசரணை பெற சாத்தியம் பெற்றவர்கள் எல்லாம் இப்போதைக்கும் வெளியேறியிருக்கக் கூடும்.”
பிதா.றோகான் டீ சில்வாவினால் விளக்கப் பட்ட ஆரம்ப சாட்சியங்களும், நேரடி அனுபவங்களும் விளக்குவது ஸ்ரீலங்காவின் மோதலின் பின்னான சூழலில் நடந்தேறிய சர்ச்சைக்குரிய சம்பவங்களைப் பற்றிய பெறுமதியான மற்றும் மிகவும் தேவையான உள்நடத்தைகளைப் பற்றிய விபரங்களை,அவை தொடர்ச்சியாக உலக ஊடகங்களில் அநேகமாகத் தவறாக வழிநடத்தப் பட்டோ அல்லது பரபரப்பாக விளம்பரப் பட்டோ பரவலாக இடம் பிடித்திருந்தன. இவ்வகையான காரணங்களைக் கூறுதல், உள்ளக இடப் பெயர்ச்சிக்கு உள்ளானவர்கள் முகம் கொடுத்த இன்னல்களை விரிவாக அறிந்து கொள்ள உதவுவதுடன் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் முடிவின் தன்மையினால் உருவான மனிதாபிமான இடர்களை கையாள்வதில் இருக்கும் உட்சிக்கல்களை புரிய வைப்பதற்கும்.
(சேர்ஜி டீசில்வா—ரணசிங்க ஒரு ஆய்வாளர்,அவர் தெற்காசிய மற்றும் இந்து சமுத்திரபிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் விசேடத்துவம் பெற்றவர்)
தமிழில். எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக