பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை நேற்று சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.”பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது.
உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரிதும் துணைபுரியும்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்வதற்கான அரசு உருவாக்கியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது பிரித்தானியாவின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவின் தலைவர் ரிச்சர் மற்றும் அவருடைய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக