புதன், 1 டிசம்பர், 2010

ஈரானிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள். அமெரிக்கா புகார் : ரஷ்யா மறுப்பு

ஈரான் நாடு நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தன் வசம் வைத்திருப்பதாக அமெரிக்கா பயப்படுகிறது. இது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஈரான் அரசு, வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டது. அமெரிக்காவின் கூற்றுப்படி, கடந்த 2005-ஆம் ஆண்டு 19 பி.எம்.-25 ரக ஏவுகணைகள் கப்பலில் ஈரான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ராக்கெட்டுகள் 2,500 கி.மீ. முதல் 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தவை ஆகும் என கூறியது. அதற்கு, வட கொரியா வழங்கிய அந்த ஏவுகணைகளின் புகைப்படங்கள் எதுவும் உள்ளதா? என ரஷ்யா கேள்வி எழுப்பியது. இந்த குற்றச்சாட்டை போதிய ஆதாரங்கள் இல்லை என ரஷ்யா அப்போது மறுத்தது என விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: