சனி, 4 டிசம்பர், 2010

கடலூரில் 10 ஆயிரம் வீடுகள் சேதம்: மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுகாவில் வெள்ளம் பாதித்த பகுதியினை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் எக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை உயர்த்தி ரூ.5 ஆயிரமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு முதல்வர் பொது நிதியில் இருந்து ரூ.1 லட்சமும், பேரிடர் நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகையை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நிலவரி ரத்து ஏற்கனவே உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும், முதல்வருக்கும், அரசுக்கும் வெள்ள சேதங்களை உடனுக்குடன் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் சூழ்ந்த அனைத்து வீடுகளையும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 4, 5 நாட்களில் 10ஆயிரம் வீடுகள் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்து உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: