ஞாயிறு, 25 ஜனவரி, 2026

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு - பாஜக விஜய்க்கு கண்டிஷன்... ஆட்சியில் பங்கு

 K.K.   :  ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு... பாஜக பக்கம் சாயும் விஜய்... பாஜக விஜய்க்கு போட்ட கண்டிஷன்... 
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. தவெக என்கிற ஆப்சன் இருப்பதை பயன்படுத்தி கொண்டு திமுகவிடம் அதிக தொகுதிகள் மிரட்டு பெற்று விடலாம் என காங்கிரஸ் போட்ட திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் போட்ட கூச்சலுக்கு திமுக செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் திமுக உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தவெக பக்கம் செல்வதா என காங்கிரசை கட்சி ஆலோசனையில் சமீபத்தில் ஈடுபட்டது, அப்போது செல்வப்பெருந்தகை உட்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள்  திமுக உடன் கூட்டணியை தொடரவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் 1 தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது, தொடர்ந்து திமுக மீது சவாரி செய்து தான் நமக்கு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என தங்கள் தரப்பு வாதத்தை வைத்து இருக்கிறார்கள்.


மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம், திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைப்பது, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமம் என டெல்லி காங்கிரஸ் தலைமையை எச்சரித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து திமுக உடன் கூட்டணியை தொடர்வது தான் சரி என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது காங்கிரஸ் டெல்லி தலைமை.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட பலர் கலந்து கொண்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய முக்கியமானவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை, இதற்க்கு முக்கிய காரணம் திமுக உடன் கூட்டணியை தொடர்வதாக காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவில் இவர்களுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் பொதுக்குழுவில் பங்கேற்க மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர். அந்த வகையில் கூட்டத்தில் பங்கேற்காத 30 பேர்கள் மட்டுமே தவெக கூட்டணியை விரும்புபவதாகவும் மீதம் உள்ள 60 பேர் திமுக கூட்டணியை தொடர விரும்புவதால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை காங்கிரஸ் கைவிட்டுள்ள நிலையில் விரைவில ராகுல் காந்தி மற்றும் கனிமொழி இருவரும் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    


இந்நிலையில் தவெக பக்கம் காங்கிரஸ் வரும் என காத்திருந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது, மேலும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறாததால், விசிக போன்ற மற்ற கட்சிகளுக்கும் திமுக கொடுக்கும் தொகுதியில் போட்டிபோயிடுமே தவிர, இனி கூட்டணியை விட்டு வெளியேறாது, என்பதால் விஜய் தற்பொழுது தனித்து விடப்பட்டுள்ளார். ஆகையால் தற்பொழுது விஜய்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜக பக்கம் செல்வது தான்.
ஆனால் பாஜக பக்கம் விஜய் நடத்திய பேச்சுவார்த்தையில் 20 தொகுதிகளுக்கு மேல் தவெகவுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து விட்டதாம், அதிமுகவும் அதே முடிவில் இருப்பதால் விஜய் நிலை பரிதாபத்தில் உள்ளது. மேலும் பாஜகவை கழட்டிவிட்டுங்க நாங்கள் உள்ளே கூட்டணிக்கு வருகிறோம் 70 தொகுதி தாங்க என விஜய் தரப்பு கேட்க 20 தொகுதிக்கு மேல் 1 தொகுதி கூட கிடையாது, இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காத நீங்கள், குறிப்பாக உங்களுக்கு எவ்வளவு ஓட்டு சதவிகிதம் இருக்க என்பதை தனித்து போட்டியிட்டு நிரூபித்து வாங்க அடுத்த தேர்தலில் பார்ப்போம் என அதிமுகவும் கதவை சாத்தி விட்டதால் தவெக தனித்து விட்டபட்டுள்ளது .ஆகையால் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிக்கு வேட்பாளரை எங்கே தேடுவது என திகைத்து நிற்கிறாராம் விஜய்.

கருத்துகள் இல்லை: