தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள
அம்பேத்கர் திரைப்படத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார் முதல்வர் கருணாநிதி.தாழ்த்தப்பட்ட, நலிந்த சமுதாய மக்களின் உரிமைக்காகப் போராடிய அரசியல் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் திரைப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால், தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, “அம்பேத்கர்’’ திரைப்படம் இன்றுவெளியிடப்படுவதையொட்டி, அப்படத்தைத் தயாரித்துள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொதுமேலாளர் டி.இராமகிருஷ்ணனிடம் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் கருணாநிதி இன்றுவழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக