வியாழன், 2 டிசம்பர், 2010
இந்திய உதவி வீடமைப்பு திட்டம், முதற்கட்ட நிர்மாண ஏற்பாடுகள் பூர்த்தி
இந்தியாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் முதற்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படும் ஆயிரம் வீடுகளில் கிளிநொச்சியில் 350 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக் கப்படுவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் 150 வீடுகள் நிர்மாணிக்கப்படு மென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெ ல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் வீடுகள் புனரமைப்புச் செய்யப்படுவதுடன் 5150 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படு மெனவும் அரச அதிபர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக