வியாழன், 2 டிசம்பர், 2010

குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன

யாழில், தொடரும் கள்வர்களின் கைவரிசை
யாழ், குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை, குறிப்பாக இரவு பெய்யும் மழையை சாதகமாகப் பயன்படுத்தும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றார்கள். இந்த வகையில் கோண்டாவில் கிழக்கில் உள்ள கொட்டைக்காட்டுப் பகுதியில் உள்ள வீட்டின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்ளிறங்கிய திருடர்கள் அங்கிருந்து சுமார் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான பணம் உட்பட பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேவேளை, மற்றுமொரு வீட்டில் சென்று யன்னலை உடைத்த போது சத்தத்தைக்கேட்டு வீட்டுக்காரர்கள் சத்தம்மிட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் செல்ல முயன்ற போதிலும் திருடர்கள் மிகவும் துணிச்சலாக தாம் இருக்கும் இடத்தில் இருந்து பொது மக்கள் நின்ற இடத்திற்கு ஔி அடித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் அந்த இடத்திற்கு செல்ல தயக்கம் காட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அயலில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் கொடுத்து போதிலும் அவர்கள் வரமறுத்த நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க எடுத்த நடவடிக்கையும் வெற்றி பெறாத நிலையில் திருடர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: