வியாழன், 2 டிசம்பர், 2010

சிம்பு, பரத் கதாபாத்திரங்கள் இறந்துவிடுவதாக க்ளைமாக்ஸில

வானம் சிம்பு சொல்லும் மற்றம்!

            சிம்பு, பரத், அனுஷ்கா, சினேகா உல்லால், பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால் என வானம் படத்தில் இளம் நடிகர் பட்டாளமே இருக்கிறது. படபிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் இதன் இசை வெளியீடும் நடந்து முடிந்துள்ளது. வழக்கமாகவே சிம்பு, யுவன் காம்பினேஷனில் வரும் பாடல்கள் ஹிட்டாகிவிடும். வானம் பாடல்களும் அப்படித்தான்.


வானம் படத்தின் படபிடிப்பு முடிந்திருந்தாலும் படத்தின் க்ளைமாக்ஸில் சிம்புவுக்கு திருப்தி இல்லையாம். இயக்குனர்கள் விஷயத்தில் சிம்பு எப்பவுமே மூக்கை நுழைப்பார் என்பது வழக்கமான பஞ்சாயத்து. வானம், 'வேதம்' என்ற தெலுங்கு படத்தில் ரீமேக்தான் என்பதால் தெலுங்கில் இருந்த க்ளைமாக்ஸை அப்படியே தமிழிலும் வைத்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ். தெலுங்கு படத்தின் இயக்குனரும் இவரே. 

அதில் சிம்பு, பரத் கதாபாத்திரங்கள் இறந்துவிடுவதாக இருக்கும். ஆனால் அந்த க்ளைமாக்ஸில் சிம்புவுக்கு திருப்தி இல்லை. அதனால் இயக்குனரை க்ளைமாக்ஸை மற்ற சொல்லி அடம் பிடித்து வருகிறார் சிம்பு. இயக்குனரும் தெலுங்கில் நான் சில தவறுகள் செய்துவிட்டேன், அதே தவறை தமிழிலும் செய்யக் கூடாது என்று தெரிவித்து வருகிறார். இதனால் வானம் க்ளைமாக்ஸ் மாற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது...

நல்ல விஷயத்த யாரு சொன்னா என்னங்க!  

கருத்துகள் இல்லை: