புதன், 1 டிசம்பர், 2010

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நாளை உரை

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தின் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் நாளை (02) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றுகிறார். 1823 முதல் 187 வருட ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் உரையாற்றுமாறு இரண்டு முறை அழைக்கப்பட்ட ஒரேயொரு நாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அத்துடன் அண்மைக் காலத்தில் ஆசிய வலயத்தில் உருவான தரிசனத்துடன் கூடிய நாட்டுத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்காணப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான உபாய மார்க்கங்கள்’ என்ற தொனிப்பொரு ளில் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் பழைமையான பல் கலைக்கழகங்களில் ஒன்றாகும். உலகின் உயர் மட்ட வல்லுனர்கள் மற் றும் அரசியல் தலைவர்கள் பலர் இங் கிருந்து உருவாகியுள்ளனர். அத்துடன் உலகின் உயர்மட்ட தலைவர்கள், வல்லுனர்கள் பலர் ஒக்ஸ்போர்ட் மாணவ சங்கத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, பெனாசிர் பூட்டோ, லீக்வான் யு, மஹதீர் மொஹமட் மற்றும் இலங்கையைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோர் அங்கு விசேட உரையாற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: