சனி, 4 டிசம்பர், 2010

கோவை சரளா: யாரோ ஒருத்தன் என்னிடம் இருந்து தப்பித்துப் பிழைத்துப் போகட்டும்

சிநேகிதனய்... ர்ர்ரகசிய சிநேகிதனய்’’ என்று விவேக்கை கலாய்த்து பாடிய கோவை சரளாவைத்தான்



எஃப்.எம்-மில் ‘சிநேகிதனே’பாட்டைக் கேட்டால் அதைப்பாடிய சாதனா சர்கமையோ அல்லது அந்தப் பாட்டுக்கு நடித்த ஷாலினியையோகூட முதலில் நமக்கு ஞாபகம் வராது. ‘‘சிநேகிதனய்... ர்ர்ரகசிய சிநேகிதனய்’’ என்று விவேக்கை கலாய்த்து பாடிய கோவை சரளாவைத்தான் முதலில் ஞாபகம் வரும்!

‘‘எனக்கு சினிமாவுல நடிக்கணுங்கிற ஆர்வம் நிறையவே இருக்கிற விஷயம் பாக்யராஜ் ஸாருக்குத் தெரியும்.ஏன்னா அவருக்கும் எங்க ஊருதான். அவர்தான் முதல்ல என்னை ஃபீல்டுல அறிமுகப்படுத்தினாரு. ‘முந்தானை முடிச்சு’ படத்துல ரெண்டு இடத்துலதான் வருவேன். பட் ரொம்ப வெயிட்டா ரசிகர்களோட மனசுல நின்னுட்டேன்.அதுக்கப்புறம் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ஜப்பானில் கல்யாண ராமன்’னு காமெடி ரோல் செட் ஆயிடுச்சு.

‘சதிலீலாவதி’ படத்துல கமல் ஸார் ஜோடியா கூட ஆக்ட் பண்ணினேன். அந்தப் படத்துல அவருக்கு ஜோடியா குஷ்பு இல்லேன்னா சுகன்யாவைதான் போடுறதா இருந்துச்சு.பட் கமல் ஸார் தான் இந்த கேரக்டருக்கு கோவை சரளாதான் கரெக்டான சாய்ஸ்-னு என்னை செலக்ட் பண்ணுனாரு.பெரிய ஹீரோ...அது மட்டுமில்லாம எனக்கு முக்கியத்துவம் கொடுத்து செலக்ட் பண்ணியிருக்கிறாரு.படம் நல்லா ஓடலைனா ஜோடி சரியில்லேனு எல்லாரும் சொல்லிடுவாங்களோங்கிற பயத்துலயே நான் நடிச்ச படம் அது. பட் வெரி சக்ஸஸ்.

அந்தப் படத்துல ‘மாறுகோ மாறுகோங்கிற’ பாட்டை யாருமே மறந்திருக்க மாட்டாங்க.நிறையப் பேர் அந்தப் பாட்டை நான் பாடுனதுன்னுதான் நினைச்சிட்டிருக்காங்க.ரகசியத்தைப் போட்டு உடைக்கணும்னா அது சித்ரா பாடுன பாட்டு.

முதல்ல என்னோட வாய்ஸ்லதான் கமல் ஸார் அந்தப் பாட்டை பாடச் சொன்னாரு.சங்கீதத்துக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காம ‘முயற்சி பண்ணுங்க சரளா’-ன்னு சொல்லிட்டாரு.நானும் பிராக்டிஸ்-லாம் பண்ணிட்டு வந்து ரிக்கார்டிங் தியேட்டர்ல ‘ச’-ன்னுதான் ஸ்டார்ட் பண்ணுனேன்.எல்லாரும் சிரிச்சிட்டாங்க.அவ்வளவு கொடூரமா இருந்துச்சு. ‘இப்படி பாடி யாரு கேட்குறது’ன்னு சொல்லி சித்ராவை புக் பண்ணிட்டாங்க.

இதுவரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்-னு கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். பட் ஏதாவது ஒரு நகைச்சுவை கேரக்டரை ரீமேக் பண்ணி நான் நடிக்கணும்னா அது கண்டிப்பா ‘திருவிளையாடல்’ படத்துல நாகேஷ் ஸார் செஞ்ச ரோலாத்தான் இருக்கும்’’ என்ற சரளாவிடம் வழக்கம் போல் நாமும் ஏன் ‘‘இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்றோம்.

‘‘ஓ... அதுவா, திருமணத்தில் எதுவும் வெறுப்பில்லை. யாரோ ஒருத்தன் என்னிடம் இருந்து தப்பித்துப் பிழைத்துப் போகட்டும் என்கிற நல்லெண்ணம்’’தான் என்கிறார் படு கேஷூவலாக சரள்!...

கருத்துகள் இல்லை: