சனி, 31 ஜனவரி, 2026

எச். ராஜாவுக்கு 'பக்கவாத’ பாதிப்பு : அப்பல்லோ அறிக்கை!

 minnambalam.com -  Kavi  :  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எச்.ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா, NDTV தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி 30) கலந்துகொண்டிருந்தார்.  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மேடையிலேயே எச்.ராஜா மயங்கி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் எச். ராஜாவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்கக் கூடும்  என்று சந்தேகித்து, அதற்கான மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.  அதன்படி பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை இன்று (ஜனவரி 31) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நேற்று (ஜனவரி 30) பக்கவாத பாதிப்பு (Stroke) காரணமாக அனுமதிக்கப்பட்ட எச். ராஜா அவர்கள், தற்போது சீராக  உள்ளார். அவர் மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைத்து, நன்கு தேறி வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உரையாடும் நிலையில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: