செவ்வாய், 27 ஜனவரி, 2026

திமுக ஆதரவா? ‘No சீட்’- ஆர்டர் போட்ட ராகுல்? கோபத்தில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

 minnambalam.com :  “பொறுமைக்கும் எல்லை உண்டு” என்பது பொருத்தம்தான் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா எந்த கட்சி தலைவரோட பொறுமையை பத்தி சொல்றீரு?
சிஎம் ஸ்டாலினின் பொறுமையைத்தான் சொல்றேன்.. இப்ப நிலைமைக்கு இன்னமும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியா முடிவாகலங்கிறதுதான் நிஜம்.. ”ஆட்சி அதிகாரத்துல பங்கு.. அதிக இடம்”னு ஸ்டாலின் கிட்ட காங்கிரஸ் ஐவர் குழு சொல்லிட்டுப் போச்சு.. ஸ்டாலினும், ”கூட்டணி ஆட்சி கிடையவே கிடையாது”ன்னு ஆ.ராசா மூலமாக ராகுல் காந்திக்கு சொல்லி அனுப்பிட்டாரு..
இதுக்கு பிறகு, கூட்டணியை உறுதியும் இறுதியும் செய்யுறதுக்கு ரெண்டு தரப்பும் எந்த மூவ்-ம் செய்யவும் இல்லை..


இதை பத்தி திமுக வட்டாரங்களில் பேசுனப்ப, “கூட்டணி ஆட்சிதான்னு ராகுல் உறுதியா சொல்றாரு.. நம்ம சிஎம், அதெல்லாம் முடியாதுன்னு தெளிவாகவே ஆ.ராசா மூலமாக ஏற்கனவே சொல்லி அனுப்பிட்டாரு..

ராகுல் காந்தி இறங்கி வர்ற மாதிரியும் தெரியலை.. ”இதே ராகுல் காந்தியை INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்னு முதல்ல அறிவிச்சதே சிஎம் ஸ்டாலின்தான்.. அதுவும் அன்னைக்கு ராகுல் காந்தியை மற்ற கட்சிகள் எல்லாம் அக்செப்ட் பண்ணிக்காத சூழ்நிலையில பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சாரு சிஎம்..

Watch: Amid 'Mughal mindset' jab, Rahul Gandhi shares a 'sweet moment' with TN CM Stalin- The Week

கோவையில 2024 எலக்‌ஷன்ல ராகுல், சிஎம் எல்லாம் கலந்துகிட்ட மீட்டிங்குக்கு வர்றதுக்கு முன்னாடி சிங்காநல்லூர் ஏரியாவுல காரை ஒரு ஓரமா நிறுத்த சொல்லிட்டு தடுப்பு சுவரை எல்லாம் தாண்டிப் போய் ஸ்வீட் கடையில, ”என் பிரதர் ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்குறேன்”னு சொல்லி வாங்கிட்டு 5 கிமீ-க்கு அதை கையிலேயே பத்திரமா வெச்சிருந்து மேடையில சிஎம்கிட்ட கொடுத்தவரும் இந்த ராகுல் காந்திதான்.. அன்னைக்கு அந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாச்சு..

ஆனா இப்ப 2026 முக்கியமான எலக்‌ஷன் இல்லையா? அதுல ‘சிஎம் வேட்பாளர் என் பிரதர் ஸ்டாலின்தான்’ன்னு உறுதியா சொல்றதுக்கு ராகுல் காந்திக்கு மனசு வரலையே.. திமுக கூட்டணியை உறுதி செய்யவும் பேச வரலையே.. அப்படின்னா சிஎம்-க்கு எவ்வளவு அதிருப்தியும் கோபமும் இருக்கும்?” என்கின்றனர்.

திமுகவின் சீனியர் லீடர்ஸ் கிட்ட பேசுனப்ப, “சோனியா காந்தி அம்மையார் தலையிட்டு பேசுனாதான் இதுக்கு முடிவு தெரியலாம்”னு சொல்றாங்க..

சரிப்பா.. காங்கிரஸ் என்னதான் சொல்றாங்கன்னு கேட்டீங்களா?

”கூட்டணி பத்தி பொதுவெளியில பேசவே கூடாது”ன்னு உத்தரவு போட்டாச்சுன்னு டெல்லியில நடந்த மீட்டிங்குக்கு பிறகு கோரஸா எல்லோரும் சொன்னாங்க.. ஆனால் மாணிக்கம் தாகூர் எம்.பி, பிரவீன் சக்கரவர்த்தி போன்றவங்க விடாம திமுகவை சீண்டி கிட்டுதான் இருக்காங்க..

இன்னைக்கு கூட மாணிக்கம் தாகூர், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.
தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகாரத் திமிருடன் இருந்தால், தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது”ன்னு ட்வீட் போட்டு ‘பஞ்சாயத்தை’ கூட்டிவிட்டிருக்காரு..

இதை பத்தி மாணிக்கம் தாகூர்கிட்ட அவரது நண்பர் ஒருவர் கேட்டப்ப, அவரு அதிர்ச்சி தகவல்களையா அடுக்கி வைச்சிருக்காரு..

என்னப்பா அதிர்ச்சி தகவல்கள்?

”இடைவிடாம ட்வீட் போட்டு திமுக கூட்டணியில ஏன் சார் குழப்பம் ஏற்படுத்துறீங்க”ன்னு மாணிக்கம் தாகூர்கிட்ட நண்பர் கேட்குறப்ப, “சார்.. டெல்லி மீட்டிங்குக்கு நாங்க எல்லோரும் போனோமே.. அங்க என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே எல்லாருமே பேசிகிட்டு இருக்காங்க…

டெல்லி காங்கிரஸ் ஆபீசுல, நம்ம ஸ்டேட் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட ராகுல், கார்கே, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் எல்லோரும் மீட்டிங் ஹாலில் இருக்கிற மாதிரி முதல்ல போட்டோஸ் எடுத்தாங்க.. அது முடிஞ்ச உடனே ராகுல் காந்தி ரூம்-க்கு போனாரு.. அவருக்கு பின்னாடியே கார்கே, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கரும் போனாங்க..

அங்க எங்க எல்லாரையும் கூப்பிட்டு One to One ஒப்பீனியன் கேட்டாங்க.. இப்படி கேட்கும் போது, ஸ்டேட் பிரசிடென்ட் செல்வப்பெருந்தகையை பக்கத்துல உட்கார வைக்கலைங்கிறது ரொம்ப முக்கியம் சார்..

முதல்ல ப.சிதம்பரம், 10 நிமிசத்துக்கு மேல அவரோட கருத்தை சொல்லிட்டு வந்துட்டாரு..

அவருக்கு பிறகு சிலர், ”கட்சி தலைமை என்ன முடிவு எடுக்குதோ அதை ஏத்துக்கிறோம்”னும் சொன்னாங்க..

நாங்க எல்லாம், “ ஆட்சி அதிகாரத்துல பங்கு கேட்கனும்.. கூட்டணி ஆட்சிதான் அமைக்கனும்..”னு சொல்லிட்டு, “அப்படி திமுக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கலைன்னா விஜய்யுடன் கூட்டணி வைக்கிற ஆப்ஷனையும் பார்க்கலாம்”னு வெளிப்படையாகவே சொன்னோம்..

இந்த ஒன் டூ ஒன் மீட்டிங்குல, ”திமுக கூட்டணியிலதான் இருக்கனும்.. காங்கிர்ஸ்- திமுக கூட்டணி நீடிக்கனும்” னும் சில பேரு சொன்னாங்க.. ஆனா அவங்க நிலைமை என்னாச்சு தெரியுமா சார்”?ன்னு புதிர் போட்டிருக்கார் மாணிக்கம் தாகூர்.

அப்படி புதிர் போட்டுவிட்டு தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், “திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் இருக்கனும்னு உறுதியா சொன்னது மொத்தம் 6 பேர் மட்டும்தான்.. அவங்க 6 பேரும் யாரு என்னாங்கிற விவரத்தை எல்லாம் குறிச்சு வெச்சுகிட்டு, அந்த 6 பேருக்கும் எலக்‌ஷனில சீட்டே கொடுக்காதீங்கன்னு மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர்கிட்ட அங்கேயே கோபமாகவே சொல்லிட்டாரு ராகுல் காந்தி.

ராகுல் காந்தி இவ்வளவு சீரியஸா இருக்கிறாருங்கிறதை புரிஞ்சுக்காமலேயே பேசுறாங்க.. அவர் என்ன நிலைப்பாட்டுல இருக்கிறாரோ அதைத்தான் நாங்க பேசுறோம்.. எங்களை விமர்சிச்சா நாங்களும் பதிலடி கொடுப்போம்.. அமைதியா எல்லாம் இருக்க முடியாது சார்” என கொட்டித் தள்ளிவிட்டார்.

சரி.. ராகுல் காந்தியோட நெக்ஸ்ட் மூவ்தான் என்ன?

டெல்லி காங்கிரஸ் சீனியர்கள்கிட்ட நாம கேட்டப்ப, “கூட்டணி ஆட்சி இல்லைன்னு ஸ்டாலின் உறுதியாக சொல்லி இருக்காரு.. அதே நேரத்துல ”துணை சபாநாயகர் பதவி, வாரியத் தலைவர்கள், அரசு நியமன பதவிகளில் கணிசமான ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்கள் தருவோம்”னு திமுக தரப்புல சொல்லிவிட்டு இருக்காங்க இல்லையா? அது சரிப்பட்டு வருமா? அதை அக்செப்ட் செஞ்சுகிட்டா சரியா இருக்குமா?ன்னும் டிஸ்கஷன் நடக்குது..

இன்னொரு பக்கம் 100 சீட் தர்றோம்.. துணை முதல்வர் பதவி தர்றோம்னு விஜய் சொல்லி இருக்காரு.. அந்த ஆப்ஷனும் எங்க முன்னாடி இருக்கு.. இதுல என்ன முடிவு செய்யுறதுன்னு யோசிக்கிறதாலதான் எங்க ஸ்டேண்ட் என்னன்னு தெரியாம குழப்பம் இருந்துகிட்டே இருக்குங்க”
என சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

கருத்துகள் இல்லை: