ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தார் ரோட்டில் காயவைக்கும் நெல் தாரொடு சேர்த்து உண்ணவைக்கும்

May be an image of combine and text that says "P ரோட்டில் நெல்: விஷம் கலந்த சோறு -விழித்துக்கொள்!"
Atputha Piratheep : நம்ம ஊர் 'விஞ்ஞானிகள்' செய்யும் இந்த 'காப்பெட்ரோட் களம்' நெல் காயப்போடும் வைபவத்தை, கொஞ்சம் அறிவியலையும் கலந்து மூளையை களட்டி கிணத்து தண்ணீல கழுவீட்டு வாசியுங்கோ.....
இதை வாசிக்கும்போது சில 'மோட்டு மேதாவிகளுக்கு' கோபம் வரலாம். வரட்டும், அதுவும் ஒருவிதத்தில் உடம்புக்கு நல்லதுதான்!
#கார்ப்பெட் ரோட்டு தார் #tar. இது நெல் காயப்போடும் களம் அல்ல, எமன் பாசம் வீசும் தளம்!
எங்கடை சனத்துக்கு எப்பவுமே ஒரு 'விபரீத புத்தி' உண்டு. "அரசாங்கம் நமக்காக ரோடு போட்டிருக்கு" எண்டு நினைச்சியளோ? இல்ல, நம்மட ஆட்கள் அதை 'இலவச களம்' (Free Drying Floor) எண்டுதான் நினைப்பினம் விளங்குதோ மோனே??
தார்ப்பாய் வாங்க காசு செலவழிக்க மனமில்லாம, "ரோடு கறுப்பா இருக்கு, வெயில் நல்லா அடிக்கும்" எண்டு வியாக்கியானம் பேசுற கூட்டத்துக்குத் தெரியறதில்லை, அவங்கள் அரிசியோட சேர்த்து 'விஷத்தையும்' அவிச்சுச் சாப்பிடுறாங்கள் எண்டு.
அந்த 'ரோட்டு நெல்' தின்னும்போது இலவசமாகக் கிடைக்கும் 'சத்துக்கள்'...?!
1. தார் (Bitumen) எனும் ஸ்லோ பொய்சன் (Slow Poison)
தார் ரோட்டின் அடிப்படைப் பொருளே Bitumen தான். இது பெட்ரோலியக் கழிவு. வெயில் கொளுத்தும் போது தார் உருகி ஆவியாகும். அவி மேல இருக்கிற நெல்லில அரிசி மணியில் ஊறும் அதை தின்னும் எங்கள் குழந்தைகளின் நிலைமை...??? யாருக்கு என்ன கவலை அவையவைக்கு நெல்லுமூடை பத்து பதினஞ்சு ஆயிரம் போனால் குண்டீல தட்டின புழுகம் கண்டியளே....
அறிவியல் கொஞ்சம் கவனமா பாருங்கோ..... தாரில் Polycyclic Aromatic Hydrocarbons (PAHs) என்ற நச்சுப்பொருள் இருக்கு. இது ஒரு நேரடி Carcinogen (புற்றுநோய் காரணி). இன்னும் நிறைய இருக்கு முழுதா எழுதினால் பயந்திடுவீர்கள்.....
"என்ரை நெல்லு நல்லா காயுது" எண்டு சந்தோஷப்படாதீங்கோ. அந்த சூட்டுல தார் உருகி, நெல்லின் தோலுக்குள்ள ஊடுருவி, அரிசியோட ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கு. சோறு வடிக்கும்போது அது போகாது, நேரா எங்கடை குடலுக்குத்தான் போகும்.
2. டயர் துகள்களும் மைக்ரோ பிளாஸ்டிக்கும் (Microplastics)
ரோட்டில நெல் காயுது எண்டா, வண்டி ஓடாமலா இருக்கும்? லொறி, பஸ், கார் எல்லாம் நெல்லுக்கு அதீத ஊட சத்துகளை வழங்கும் இல்லையா மேதாவிகளே.....??
வண்டி டயர்கள் தேய்ந்து உதிர்வது Micro-rubber particles. இதுல Cadmium, Lead (ஈயம்) போன்ற கனரக உலோகங்கள் (Heavy Metals) இருக்கு. அதெல்லாம் எங்கள் குழந்தைகளின் உடலில் மூளையில் என்னவெல்லாம் செய்யும் எண்டு நான் விளங்கப்படுத்தத் தேவையில்லை. அந்த துறை சார்ந்த வைத்தியர்கள் இருந்தால் கமண்டில் சொல்லுங்கள் அந்த அறப்படிச்ச பல்லிகளிற்கு....
நீங்க சாப்பிடுறது மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காறி அரிசி சோறு மட்டும் இல்ல, அதோட கொஞ்சம் 'டயர் பிரட்டல்' லும் சேர்த்துத்தான். அப்புறம் ஏன் கிட்னி ஃபெயிலியர் வருது எண்டு டாக்டரைக் கேட்கக்கூடாது. கிளிநொச்சி, வவுனியாக்காரர், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தார் உங்களைத்தான்.....
3. ரோட்டுத் தூசும், புகையும் (Exhaust Fumes)
வண்டிப் புகையில வர்ற கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்ஸைடு எல்லாம் அந்த நெல்லிலதான் படியும்.
ஊருக்குள்ள இருக்கிற அத்தனை நாயும், மாடும், ஏன்... சில சமயம் மனுஷனும் துப்புறது, அசிங்கம் பண்றது எல்லாம் அதே ரோட்டிலதான். அதையெல்லாம் காத்தோட காத்தா நெல்லுக்குள்ள மிக்ஸ் பண்ணி, "இயற்கை உரம்" எண்டு சொல்லி தின்பினமோ? சிவசிவா! சுடலைமாடா....
மோட்டு வியாக்கியானம் பேசும் மேதாவிகளுக்கு ஒரு கொட்டு!
இப்ப, சில 'அரைவேக்காட்டு' மேதாவிகள் வருவினம். அவங்கடை வாதங்களை எப்படிடை உடைக்கலாம் எண்டு பார்ப்பம்.
மேதாவி வாதம் 1."அந்தக் காலத்தில எங்கடை பாட்டன் பூட்டன் எல்லாம் ரோட்டிலதானே காயப்போட்டாங்கள்?"
ஓமோம்... உங்கடை பாட்டன் காலத்தில இருந்தது மண் ரோடு அல்லது கிரவல் ரோடு. இப்ப இருக்கிறது பெட்ரோலியம் தார் ரோடு. மண்ணையும் தாரையும் ஒண்டு எண்டு நினைச்சியள் எண்டால், பேசாமல் தாரை அள்ளித் தின்ன வேண்டியதுதானே?
மேதாவி வாதம் 2. "மில்லில குத்தும்போது தவிடு, உமி எல்லாம் போயிடும் தானே?"
தவிடு போகும், ஆனா நெல்லுக்குள்ள ஊடுருவின இரசாயன நச்சு (Chemical residues) போகாது. தார் சூடாகி உருகும்போது வெளியிடுற வாயுக்கள் அரிசியின் பருப்புக்குள்ளேயே (Grain) இறங்கிவிடும். அதை எந்த மில்லாலும் பிரிச்சு எடுக்க ஏலாது.
மேதாவி வாதம் 3. "வேறை இடமில்லை, என்ன செய்ய?"
இடம் இல்லை எண்டு, சாப்பாட்டுல விஷத்தைக் கலப்பியளோ? தார்ப்பாய் (Tarpaulin) விரிச்சு அதுக்கு மேல காயப்போடுறதுக்கு என்ன கேடு? "சோம்பேறித்தனம்" எண்டு சொல்லுங்கோ, ஒத்துக்கொள்ளுவம்.
சோறு கண்ட இட சொர்க்கமா? இல்ல நரகமா?
நெல்லு விக்கிற காசை மிச்சம் பிடிக்க, தார் ரோட்டில காயப்போட்டு, கடைசியில அந்தப் பணத்தை அப்படியே கொண்டு போய் கேன்சர் ஆஸ்பத்திரியிலயும், கிட்னி ஆஸ்பத்திரியிலயும் கொட்டுறதுதான் இப்ப நடக்கிற 'நாகரீக விவசாயம்'.
தயவுசெய்து, "ரோடு போட்டது வண்டி ஓடத்தானே ஒழிய, உங்கடை வாய்க்கு ருசியா விஷம் ஊட்ட இல்லை" என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
விவசாயிகளிடம் குறைந்த செலவில் பாதுகாப்பான உலர்களம் (Drying floor) அமைப்பது எப்படி அல்லது மலிவான தார்ப்பாய் (Tarpaulin) பராமரிப்பு முறைகள் பற்றி யாரும் ஏழை விவசாயிகள் எழுதுங்கோ...

கருத்துகள் இல்லை: