மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பற்றி, திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி, “காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.
அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது என பேசினார்.
இந்நிலையில் இன்று மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் பதிவில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.
தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை முன் வைத்துள்ளதால் அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
radha manohar : கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது
தமிழகத்தில் விஜயோடு கூட்டணி வைத்தால்,
கேரளாவில் உள்ள விஜய் வாக்கும் அங்கு காங்கிரசுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் தமிழகத்தில் சி இ எம்மோடு காங்கிரஸ் ஒரே மேடையில் இருக்க வேண்டி வரும்
அது காங்கிரசின் கேரளா வாக்கு வங்கிக்கு சேதம் உண்டாக்க கூடும்
இப்படி எல்லாம் கணக்கு போட்டுதான் திமுகவை விட்டு விலக தீர்மானித்திருக்கிறது காங்கிரஸ்
ஆனால் திமுகவே தங்களை உதறி தள்ளவேண்டும் இன்று விரும்புவது போல் தோன்றுகிறது
காங்கிரஸ் உள்நோக்கத்தோடுதான் நடக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக