புதன், 1 டிசம்பர், 2010

வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் தேவையில்லை,'

:""வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் தேவையில்லை,'' என, மாஜி மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.

எடப்பாடி சட்டசபை தொகுதி இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஜலகண்டபுரத்தில் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாஜி மத்திய சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.,மணி, எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தமிழரசு, கன்னையன் முன்னிலை வகித்தனர்.

ஜி.கே.,மணி பேசுகையில், ""இளைஞர், இளம் பெண்களுக்கான 21வது முகாம் எடப்பாடி தொகுதியில் நடக்கிறது. இதர கட்சியினர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என யோசித்து கொண்டிக்கும் நேரத்தில் அடுத்த தலைமுறையினர் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் மட்டுமே முகாம் நடத்துகிறார்,'' என்றார்.

அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் வன்னியர்கள்தான் அதிக அளவில் குடிசையில் வசிக்கின்றனர். ஆடு,மாடு மேய்க்கின்றனர். வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடியது பா.ம.க., மாற்று கட்சி வன்னியர்களும் தற்போது பலனை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் வன்னியர்களுக்கு என தனியாக போராட முடியாது. வன்னியருக்காக போராடும் கட்சி பா.ம.க., மட்டுமே.

அண்டை மாநிலங்களில் மெஜாரிட்டி இனத்தை சேர்ந்தவர்கள்தான் முதலவராகின்றனர். தமிழகத்தில் மட்டுமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் முதல்ராகும் அவலம் உள்ளது. இலவசங்களாலும், மதுகடைகளாலும் மக்கள் சீரழிகின்றனர். தமிழகத்தில் மது அருந்துபவர்களின் சராசரி வயது 28 ஆக இருந்தது. தற்போது இந்த வயது 13 ஆக குறைந்து விட்டதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.தமிழகத்தில் இரண்டரை கோடி, ஆந்திராவில் 90 லட்சம், கர்நாடகாவில் 70 லட்சம், கேரளாவில் 40 லட்சம், புதுச்சேரியில் 8 லட்சம், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சம் என உலகம் முழுவதும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எடப்பாடியில் 2.34 லட்சம் வாக்காளர் உள்ளனர்.

 இதில், வன்னியர் மட்டும் 1.50 லட்சம் பேர். வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை. எனவே, பா.ம.க., வினர் தி.மு.க., உள்பட மாற்று கட்சியில் உள்ள வன்னியர் அனைவரையும் நமது கட்சியில் இணைக்க வேண்டும்.பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கும், இரண்டாவது கையெழுத்து ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதுதான். நாம் கூட்டணி சேர மாட்டோமா என பிற கட்சியினர் துடித்து கொண்டிருக்கின்றனர், என்றார்.

ராமதாஸ் பேசுகையில், ""குடிக்கும் மக்களை அல்ல. நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க,வின் நோக்கம். குடிக்க கூடாது. வரதட்சணை வாங்க கூடாது என்பதே பா.ம.க., இளைஞர், இளம்பெண்கள் எடுத்து கொள்ளும் உறுதிமொழியாகும்,'' என்றார்.

பா.ம.க.,வினர் கோரிக்கை : "பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம். அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம். பா.ம.க., தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என மாஜி அமைச்சர் அன்புமணி பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க.,வினர் சிலர், "" ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பது, இலவச கல்வி அளிப்பது வரவேற்கத்தக்க விஷயம். அதுபோல மதுவை ஒழிக்கும், இலவச கல்வி அளிக்கும் கட்சியினருடன்தான் பா.ம.க., கூட்டணி அமைக்கும் என்றால் நன்றாக இருக்குமே.'' என கருத்து தெரிவித்தனர்.
பாபு - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-01 07:20:55 IST
அதெல்லாம் சரி .. கோவையில் எத்தனை வன்னியர்கள் இருகிறார்கள் என்று அன்பு மணி சரியாக சொல்லட்டும். என்னோட ஒட்டு உங்களுக்குத்தான்... இங்கே உள்ள விமர்சனங்களை படித்தவுடன் வயுறு புண்ணாகும் வரை சிரித்து சிரித்து ஹ ஹா ஹா .. இன்னும் நான் இயல்பு நிலைக்கு திரும்பல .... !!!...
ஈஸ்வர் - திருப்பூர்,இந்தியா
2010-12-01 07:20:21 IST
தாஸ் உனக்கு யாருடைய தயவும் தேவையில்லையா. நீ சரியான படித்த முட்டாள். ஏன்னா தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள், ஆனால் வன்னியர்கள் மட்டும் ஒட்டு போட்டால் போதும் என்று கூறுகிறாய். அப்படியானால் மற்றவர்கள் தேவை இல்லையா? எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! இப்படி பேசினால் உனக்கு எப்படி நாங்கள் ஒட்டு போடுவோம் ..........
2010-12-01 07:16:34 IST
சார்......சார் வன்னியர் பற்றி பேசவே பயமா இருக்கு சார்...எதுக்கு சொல்றேன்னா எங்க வீட்ட சுத்தி பெரிய பெரிய மரங்களா நிக்குது. அதுதான் பயமா இருக்குதுங்க.....????...
mani - chennai,இந்தியா
2010-12-01 06:46:44 IST
மது விலக்கு, இலவச கல்வி இவை இரண்டையும் தேர்தல் அறிக்கையில் சொல்ல பா மா கா வை தவிர வேறு எந்த கட்சிக்கு துணிச்சலும் தைரியமும் இருக்கிறது. வன்னிய மக்களே சிந்தித்து செயல் படுங்கள். இங்கு வரும் கமெண்ட்ஸ் வைச்சே வன்னியர் வளர்ச்சியில் மற்றவர்கள் எவ்வளவு பொறாமை படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.ஓன்று படுங்கள் வன்னியர்களே வென்று காட்டுவோம் ....
செங்கோடு - பென்னாகரம்,இந்தியா
2010-12-01 06:38:39 IST
நானும் வன்னியன் தான்.. இவனுங்கள போல அயோக்கிய பசங்க யாரும் இல்ல.. ஒட்டு வாங்கற வரைக்கும் வன்னியன் தேவை.. அப்புறம் கழுத்தை புடிப்பானுங்க... வன்னிய உறவுகளே...! இந்த வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்.. ஆளும் கூட்டணியில் பலமுறை மாறி மாறி இருந்தும், இவர்கள் வன்னியர்களுக்கு என்ன செய்து விட்டார்கள்... இவர்கள் குடும்பம் சம்பாரிச்சதுதான்... இன்னும் இட ஒதுக்கிடு வாங்கியதை பற்றியே சொல்கிறார்கள்.. அதற்கு இன்னும் பல வன்னிய தலைவர்களின் தியாகமும் உழைப்பும் இருக்கிறது... அது இவர்களால் மறைக்கப்பட்டு ராமதாஸ் ஒருத்தரே நின்று போராடி வாங்கியது போல் பிம்பம் உருவாக்க பட்டுள்ளது... உண்மையான வன்னிய தலைவர்கள் மாற்று கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு ஒட்டு போடுங்கள்.. அப்பத்தான், நமக்கு நல்லது செய்ய எல்லாருக்கும் எண்ணம் வரும்.....
vicky - yagzyzhon,சீனா
2010-12-01 06:36:23 IST
இந்த நூற்றாண்டிலும் இப்படியும் ஒரு அரசியல் கட்சி. அதன் பின்னால் சில மனிதர்கள்....ஒன்லி இன் தமிழ் நாடு! எப்படித்தான் முன்னேறுவது???...
balu - singapore,இந்தியா
2010-12-01 06:28:07 IST
அப்பன் பிள்ளை அட்டகாசம் தாங்கமுடியல டா சாமீ...
சங்கர் - Singapore,சிங்கப்பூர்
2010-12-01 06:25:47 IST
வன்னியனுக்கு உதவி செஞ்சாதானே வோட்டு போடுவான். சுகாதாரம், ரயில்வே, பெட்ரோலியம் எந்த துறைகளில் எத்தனை வன்னியன்களுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க?...
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-12-01 06:03:15 IST
கண்டிப்பா....8 வன்னியர்கள் ஒட்டு நிச்சயமாகி விட்டது ....ஒங்க குடும்பத்திலிருந்து......
Rajesh - சிங்கபோre,இந்தியா
2010-12-01 06:00:21 IST
டாய் காலைல உருபடியா நியூஸ் படிக்கலாம்னு பாத்தா..... உன் தொல்லை தாங்க முடியலைடா. போடா இனி நியூஸ் படிக்கிற மூடே போச்சு. இன்னொரு தடவ உன் ஜாதிய பத்தி பேசுன........
பச்சைத்தமிழன் சுரேஷ் - பரமக்குடிமலேசியா,இந்தியா
2010-12-01 05:53:21 IST
வாங்கய்யா வாங்க என்னடா நாலு நாளா ஆளை காணமேன்னு பார்த்தோம். இவ்ளோ நாளா பெருசு தான் வன்னி வன்னினு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. இப்ப நீயுமா, சரி அதல்லாம் இருக்கட்டும் இப்ப யாரு உங்களை கூட்டணிக்கு கூப்பிட்டது?...
2010-12-01 05:43:24 IST
மதுவை ஒழிக்கும் அல்லது ஆரம்ப கல்வி அளிக்கும் கட்சியுடன் உங்கள் அய்யா கூட்டணி சேர மாட்டார். தன் மகனுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்தால் வாலை ஆட்டிக்கொண்டு கொண்டு ஓடுவார் கூட்டணி அமைக்க. போடா நீங்கள் தாசுவை இன்னும் நம்புறீங்க...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-12-01 05:41:05 IST
வாப்பா மணி, ஆளையே பாக்க முடியல, ஒரு நாளு வெறி புடிச்சி இருக்குன்னு கத்திகிட்டு ஒடுனியே இப்ப எப்டி இருக்கு, ஹாஸ்பிட்டல் போனியா? ஊசி கீசி குத்துனியா? அது சரி உலகம் பூரா நம்ம ஆளுங்க இருக்குரானுங்களா? நிஜமாத்தான் சொல்றியா?என்னால நம்பவே முடில...காமன் வெல்த் போட்டியில எந்த எந்த நாடு எவ்ளோ தங்கம் வாங்குச்சி அப்டின்ற மாறி ஒவ்வொரு நாட்லயும் எவ்ளோ பேரு இருக்குரானுங்கன்னு லிஸ்ட் போட்டு தாக்குற... அப்டியே சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்காவில எவ்ளோ பேரு இருக்குரானுங்கன்னு கொஞ்சம் சொல்லு...என்னாங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்கோ கேக்குறவன் கேனயனா இருந்தா மைனா படத்த டைரக்ட் பண்ணினது ஜி.கே.மணி ன்னு சொல்வ போல, நல்ல வேளை அதிபர் ஒபாமா கூட வன்னியர் தான்னு சொல்லாம இருந்தியே அது வரைக்கும் சந்தோசம்...அப்பனும் புள்ளையும் இந்த ஸ்பெக்ட்ரம் பத்தி மூச்சி விட மாட்டேங்குரிங்க. ஆனா வன்னியர் வன்னியர் ன்னு வாய் கிழிய பேசறத மட்டும் நிறுத்த மாட்டேங்குரிங்க...நாய் வால கூட நிமித்தி புடலாம், ஆனா உங்க ஜாதி வெறிய மாத்த முடியாதுடா...நீங்க எப்பவுமே திருந்த போறது இல்ல இப்டியே பேசி பேசி அழிய போறீங்க அதான் உண்மை.வர்ட்டா......

பாஸ்கர் - Singapore,சிங்கப்பூர்
2010-12-01 05:17:12 IST
நீங்க யாரு தாசு, விட்டா தென் ஆப்ரிக்கா விலேயே தனித்து ஆட்சியை பிடிச்சிடு வீங்க போல இருக்கே, அங்கேயும் பூர்ண மது விலக்கு தானே? வுங்க ஜாதி, கற்பனை எல்லாம் கடல் கடந்து இருக்கறத பார்த்த எனக்கு புல் அரிக்குது....
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-12-01 04:47:19 IST
ராமதாஸ் ஐயாவின் கடும் போராட்டத்தால் பல பேர் பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்கிறார்கள், எனவே இந்தியா தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்க ஐயாவும் ஒரு காரணம், இந்த தீர்கதரிசி ஆட்சிக்கு வந்தால் இந்தியா விரைவில் வல்லரசு ஆவது உறுதி...
ரவி - சென்னை,இந்தியா
2010-12-01 04:20:39 IST
நல்ல கொள்கைதான். ஆனால் எத்தனை பேர் உங்கள் கட்சில் குடிக்காமல் இருக்கிறார்கள்...
குண்டலகேசி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-12-01 03:14:41 IST
நீ மத்திய சுகாதார அமைச்சரா இருந்து என்ன கிழிக்க முடிஞ்சுது , ஜாதிய ஒழிக்கணும்னு நினைக்கிற நேரத்தில ,நீயும் ,உன் நைனாவும் சேந்து ஜாதி வெறிய வளர்த்து,சமுதாய சீர்கேடு செஞ்சு அரசியல் பண்ணறீங்க.. வன்னியர்கள் ஒட்டு மட்டும் விழுந்தா உனக்கு டெபொசிட் கூட கிடைக்காது .சும்மா 2 கோடி, 5 கோடினு கத உட்டுகிட்டு இருக்க , உன் கட்சிகாரனுகள மொதல்ல குடிக்க வேண்டாம்னு சொல்லு பாக்கலாம் .உங்க கட்சி கூட்டத்துக்கு வர்றவன் எவனாவது குடிக்காம நிதானத்துல வருவானா??கொஞ்ச நாள் முன்னாடி, உன் நைனா தமிழ்ல தான் படிக்கணும் அப்படி இப்படின்னு ஒளரிட்டு இருந்தாரு ,நீ மத்திய அமைச்சராய் ஆகி உன் புள்ளைங்க டெல்லில ஹிந்தி ஸ்கூல்ல படிக்கிற சங்கதி வெளிய வந்ததும் , நீயும் உன் நைனாவும் ,தமிழ் தமிழ்னு கத்துரத விட்டுட்டீங்க. நீங்களும் , தமிழநாட்ட பிடிச்ச சனியன்கலான கழகங்களும் ஒன்னு தான் , தமிழநாட்டுக்கும், வன்னியர்களுக்கும் நீ நல்லது செஞ்சு கிழிக்கணும்னு நெனச்சா , தயவு செஞ்சு நீயும் , உன் நைனாவும் அரசியல விட்டு போய்டுங்க ,இது வரைக்கும் வன்னியர்கள ஏமாத்தி சம்பாதிச்சத ,அவங்களுக்கே கொடுத்துருங்க...
பாலமுருகன் .கே - அபுதபி,இந்தியா
2010-12-01 02:47:33 IST
யோவ் மணி உனக்கும் உன் அப்பனுக்கும் இதை தவற வேற எதுவும் தெரியாத . ஏன்யா சாதி வெறிபிடித்து அலைரியுங்க . இத மாதிரி போனால் வன்னியர் லே உங்களை புறக்கணிப்பர்கள்,,,,,,,,,,,,,,,(நானும் ஒரு வன்னியர் தான்)...
வைகை செல்வன் - Periyakulam,இந்தியா
2010-12-01 02:45:40 IST
டியர் அன்புமணி நீங்கள் ஒரு படித்த டாக்டர். நீங்களே ஜாதி அரசியல் பண்ணலாமா?? என்று ஜாதி அரசியல் தமிழ் நாட்டை விட்டு ஒழிகிறதோ அன்று தான் நாடு உருப்படும்.....
ர.சித்தார்த்தன். - ஜெத்தா.,சவுதி அரேபியா
2010-12-01 02:40:42 IST
ஏழு மக்களவை தொகுதி வன்னியர்கள் ஒன்றாக அப்பனுக்கும் மகனுக்கும் ஆப்பு அடிச்சது மறேந்துபோச்சா.அன்புமணி உனக்கு சுகாதாரதுறை அமைச்சர் பதவி பிச்சை போட்டது யார்.தமிழன் என சொல்லி ஒட்டு கேட்டால் ஒட்டு கிடைக்கும். உன் சாதி பப்பு எல்லாம் இனி படையாட்சிகிட்ட எடுபடாது.அய்யோ.....அய்யோ....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-12-01 02:16:15 IST
ஸோ, அப்போ தமிழ்நாட்ல வன்னியனுக தான் அதிகமா குடிசைல இருக்காங்க, ஆடு,மாடு மேய்க்கிராங்க... சரி... அதுக்கு என்ன இப்போ? இப்போ உங்கள யாரு குடிசைல இருக்க சொன்னா? யாரு ஆடு மாடு மேய்க்க சொன்னா? இல்ல வன்னியனுக மட்டும் குடிசைல இருக்கணும், ஆடுமாடுதான் மேய்க்கனும்ன்னு எதாச்சும் மசோதா தாக்கல் பண்ணி சட்டம் கிட்டம் எதாச்சும் பாஸ் பண்ணிட்டாங்களா? இப்போ நீங்க நல்லா இருந்தா, அதை யாரு தடுத்தா? அவன்அவன் இங்க குளோபல் எக்கானமி, குளோபல் மார்க்கட்ன்னு பின்னி பெடலெடுத்து பிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கானுக. இங்க எவனும் எவனோட முன்னேற்றத்தையும் தடுக்கல, அதுக்கெல்லாம் நேரமும் இல்ல. பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்குறான், பல்லு இருந்தும் கடிக்காதவன் திங்காம அடுத்தவன கொறை சொல்லிக்கிட்டு திரியிறான். அதுதான் உன்னோட கேஸ்ல நடக்குது. பழைய காலத்துக்கு இப்போவெல்லாம் வன்னியனுக எவ்வளவோ முன்னேறி எங்கியோ போயிட்டானுக. நீயும் உங்கப்பனும்தான் இன்னும் மிச்சம் மீதி இருக்கிற பாமர வன்னியனுகள ஏமாத்தி உசுபேத்தி முன்னேற விடாம தடுக்குறீங்க. ஏன், அந்தகாலத்திலேயே உங்கப்பன் படிச்சு டாக்டர் ஆவல? நீ டாக்டர் ஆவல? முடிஞ்சா முன்னேறுன வன்னியனுக மத்தவனுகளையும் கை கொடுத்து தூக்கி விடுங்க. இல்லேனா மூடிக்கிட்டு ஒரு ஓரமா டவுசர மாட்டிகிட்டு குந்துங்க. காலம் போற ஓட்டத்துல தோனான் துருப்பி எல்லாம் முன்னேறி ஜிவுன்னு போய்கிட்டு இருக்கு. நீங்க ரெண்டுபேரும் இல்லாமையே வன்னியனுக கும்ன்னு மேல போய் காட்டுவாணுக. நீ மொதல்ல ஒதுங்கி நில்லு. இல்லேனா உண்மை தெரிஞ்சுதுன்னா வன்னியனுகளே உன்னோட டவுசர கழட்டி வெரட்டி வெரட்டி அடிச்சு தொரத்தி புடுவாணுக. ஓடி போ....

பாலா - சான்டியாகோ,இந்தியா
2010-12-01 01:51:30 IST
அன்புமணி, உனக்கு தேர்தல்ன்ன என்னனு தெரியுமா, அதுக்கு மத்த கட்சிகளோட போட்டி போடணும், ஜெயிக்கணும். பின் வாசல் மூலமா அமைச்சர் ஆனா இப்டிதான், சும்மா லூசு மாத்ரி பேசகூடாது. துடிக்ராங்களா, பமக ன்னா அலறுறாங்க.......
இஸ்மாயில் - ரியாத்,சவுதி அரேபியா
2010-12-01 01:18:02 IST
எல்லோரும் ரெடியா? வாங்க வாங்க உங்க அர்ச்சனைய ஆரம்பிக்கலாம்...
தளபதி - chennai,இந்தியா
2010-12-01 01:17:25 IST
அய்யா உங்களுக்கு வேற வேலையே இல்லையா.....இதுக்கு மேல வேற கட்சியே இல்ல கூட்டணி சேரத்துக்கு......தேவ இல்லாம சாதி பெற கொச்ச படுத்தாதீங்க.......
பகல் கனவு - தோஹா,கத்தார்
2010-12-01 01:12:51 IST
அய்யா அன்பு மணி, சந்திரன், செவ்வாய் கிரகம் இது ல எத்தனி சதவிதம் வன்னியர் இருகாங்கன்னு சொல்லவே இல்ல .... அவங்களும் வோட்டு போட்டா நீங்க தான் பிரதமர் .... !...
குஞ்சுமணி - சென்னை.,இந்தியா
2010-12-01 00:58:12 IST
என்னை யார் எப்படி திட்டினாலும், கருத்து சுதந்திரம் இல்லையென்றாலும் கவலையில்லை, பா.மா.கா ஆட்சி அமைக்கும் நாள் வெகுதூரம் இல்லை. எல்லா அரசியல் தலைவர்களில் சிறந்தவர்கள் அன்புமணி மற்றும் ராமதாஸ். அண்ணன் அன்புமணி தமிழக முதல்வராக உயிரையும் கொடுப்பான் குஞ்சுமணி....
கதிரவன்.S - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-01 00:56:31 IST
இது வேடிக்கை. இன்று இப்படி பேசும் அன்புமணி, தமிழ் நாட்டில் மது கடைகளை அரசுடமை ஆக்கியது அன்று இருந்த அதிமுக அரசுதான். அப்போது பமக அதிமுக உடன் தான் கூட்டணி வைத்திருந்தார்கள். அப்போது இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா அப்படி செய்திருந்தால் இவர்கள் இப்படி சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கு. மக்கள் மீது அப்போ இல்லாத அக்கறை இப்போ எப்படி வந்தது என்று புரியவில்லை. ராமதாஸ் அன்புமணி இவர்களின் கபடை நாடகம் மக்களுக்கு புரியாமல் இருக்குமா. இவர்கள் காணும் கணவு பலிக்காது. இவர்கள் மட்டும் இல்லை அதிமுக போடும் திட்டமும் நிறைவேறாது. மக்கள் மிகவும் தெளிவா இருக்கிறார்கள். கண்டிப்பா வரும் தேர்தலில் திமுக தனித்து போட்டி இட்டாலே 234 தொகுதிலும் அமோக வெற்றி பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீண்டும் தலைவர் கலைஞர் தான் 6 வது முறை முதல்வர். இது நிச்சயம். இதை யாராலும் தடுக்கமுடியாது. மக்கள் தலைவர் மீது தளபதி மீதும் 100 / நம்பிக்கை வைத்துள்ளார்கள். வாழ்க தலைவர். வளர்க தளபதி புகழ். நம்பிக்கையுடன் கதிரவன் துபாய் U.A.E...
tamilan - அங்காடிதெருகாங்கோ,ஜெர்மனி
2010-12-01 00:45:44 IST
பகல் கனவு காண்பதே இந்த குரூப்புக்கு வேலையாப்போச்சு...,வேற எதாவது வலை இருந்தா போய் பாருங்கடா...,...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-12-01 00:43:20 IST
டே, என்னங்கடா இது... நெஜமாவே சீரியசா காமடி பண்ண ஆரம்பிச்சுட்டானுக அப்பனும் புள்ளையும். தென்னாப்பிரிக்காவுல வன்னியனா?அதுவும் 5 லட்சமா? அதெப்படி இவனுகளுக்கு தெரிஞ்சுது? ஒரு வேலை அங்கியும் போய் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துட்டு வந்துட்டானுகளா? தென்னாப்பிரிக்காவில் வன்னியன்ங்கிறது என்ன எஸ்.வி. சேகரோட அடுத்த நாடகத்தோட தலைப்பா? அங்கெல்லாமா இருக்கானுக? எடப்பாடியில் இருந்து தென்னாப்பிரிக்கா வரைக்கும் போவுது பாட்டில் மணி. ஹூஹூ.... ஹூஹூ.... ஹூஹூ.... டேய் நெஜமாவே முடிலடா... ஆந்திரா, கர்நாடகா, கேரளா இதெல்லாம் கேட்ட ஒடனே எனக்கு வேற ஏதோ நியாபகம் வந்திடிச்சு. சரி விடு, அப்படியே, அசாம், சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் பர்மா, மலேசியா, சிங்கபூர் முதலான நாடுகளில் இருப்பது வன்னியன். அதையும் சொல்லிடேன். ஹையோ ஹையோ... டே டே.... நெஜமா நான் இந்தளவுக்கு சிரிச்சது இல்லடா. இனிமேல எவனாச்சும் எங்கிட்ட வந்து நான் வன்னியன்.... அப்படின்னு சொன்னாலே போதும்... குமுறி குமுறி சிரிக்க ஆரம்பிச்சிடுவேன் போல இருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் இந்த வன்னியன் வன்னியன் ன்னு காமடி பண்ணுறத நிறுத்தேன். இப்படி நீயும் உங்கப்பனும் வன்னியன்.... வன்னியன்.... ன்னு அவங்கள காமடியா பேசி பேசி நாளடைவில வன்னியன்னாலே காமடியணுக போல இருக்கு ன்னு ஒரு எண்ணம் தோன்றிடும் போல இருக்கு. ப்ளீஸ், கொஞ்சம் இத விட்டு தொலையேன். நெசமாத்தான் சொல்லுறேன். ஒரே விசயத்த பல ஆயிரம் முறை திரும்ப திரும்ப சொல்லுரதுனால மக்கள் நாளைடைவில அதை காமடியா பாக்க ஆரம்பிச்சிடுறாங்க. சொன்னா கேளு. விட்டுடு....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-12-01 00:38:46 IST
உலகம் முழுவதும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர் என்று கூறிய அன்பு மணி மற்ற கிரகங்களில் உள்ள(?) வன்னியர்களின் எண்ணிக்கையையும் சொன்னால் நன்றாக இருக்கும்....
ராஜா - chennai,இந்தியா
2010-12-01 00:37:54 IST
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து தான் பேசுகிறார்களா? பாவம் இந்த ஒரு லோக் சபா தோல்விக்கே இப்படி புலம்புகிறார்களே, இனி அடுத்து சட்டசபை தோல்வி காத்திருக்கிறதே.அப்போது எவ்வளவு புலம்புவார்களோ?ஆனால் அப்போது அதைகேட்க அவர்கள் கட்சியில் யாரும் இருப்பாகளோ என்னவோ?...
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-01 00:34:40 IST
தினமலர் இது போன்ற செய்திகளுக்கெல்லாம் அதிக முக்கியத்தத்துவம் கொடுப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உங்களுடைய இணைய தள பக்கத்தில் பயனுள்ள செய்திகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் தயவு செய்து.......

கருத்துகள் இல்லை: