வியாழன், 2 டிசம்பர், 2010

புலிகளுக்கு போலிக்கடவுச்சீட்டு விநியோகம்: ஸ்பெயினில் ஏழு போ் கைது

விடுதலைப்புலிகளுக்கு போலிக்கடவுச்சீட்டு விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்பெயினில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாய்லாந்திலும் இன்னும் சிலர் கைது  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஸ்பெயினின் பார்சிலோனாவை தளமாகக் கொண்டு இயங்கிய குறித்த கும்பல் விடுதலைப்புலிகள் மட்டுமன்றி அல்கைதா உள்ளிட்ட உலகின் மிகப்பிரபலமான அனைத்துத் தீவிரவாத இயக்கங்களுக்கும் போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்கள்.
அதன் தலைவர்களாகச் செயற்பட்ட ஒரு பாகிஸ்தானியர் மற்றும் தாய்லாந்துக்காரர் ஆகியோருடன் இன்னுமொரு பாகிஸ்தானியரும் அண்மையில் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின்பே குறித்த கும்பல் ஸ்பெயினைத் தளமாகக் கொண்டு இயங்குவது தெரிய வந்துள்ளது. 
விசாரைணகளில் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஸ்பெயினில் இயங்கிய கும்பலின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நைஜீரியர், பாகிஸ்தானியர், தாய்லாந்துக்காரர் ஆகியோர் உள்ளடங்குவதாக ஸ்பெயின் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: