இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களை தொடர்ந்து சீபா உடன்படிக்கை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என வர்த்தக மற்றும் முதலீட்டு விவகார அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க எழுப்பிய வாய்மொழி மூலாமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையேயான நட்புறவு வர்த்தக நடவடிக்கையினை விருத்தி செய்வது தான் சீபா உடன்படிக்கையின் பிரதான நோக்கம் எனவும், இந்த உடன்படிக்கையினால் இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பலமடையும் எனவும் அவர் தெரவித்துள்ளார். இதேவேளை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் 16 கலந்துரையாடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக