வெள்ளி, 30 ஜனவரி, 2026

இஷ்டம் இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் வெளியேறட்டும் - திட்டவட்டமாக முதல்வர்

 dinaseval  :  தவெக என்கின்ற ஆப்ஷனை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடையாது. அதிக தொகுதியும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி மாணிக்க தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தமிழக காங்கிரஸில் இருக்கிய முக்கிய புள்ளிகள் திமுகவை விமர்சனம் செய்து வந்தாலும் காங்கிரஸ் டெல்லி தலைமை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது.



இந்த நிலையில் ராகுல் காந்தியின் தூண்டுதலின் பேரிலேயே ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் திமுகவுக்கு எதிராக பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு உள்ளையே இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். ஒன்று திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் மற்றொன்று திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜயுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்று இரண்டு தரப்பினர் உள்ளனர்.

இதில் திமுக உடன் கூட்டணியிலே தொடர வேண்டும் என்கின்ற பிரிவினர் திமுக உடன் பிறப்புகளை விட திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் பிரிவு ஆகவே மாறி இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் காங்கிரசை இரண்டாக உடைத்து அதில் ஒரு பிரிவை திமுகவில் இணைக்கும் திட்டத்தில் திமுக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளதாக தகவல் வெளியானது.

எப்படி காங்கிரஸிலிருந்து 1996 இல் ஜிகே மூப்பனார் காங்கிரசில் இருந்து வெளியாகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தாரோ, அதே போன்ற ஃபார்முலாவை 2026 இல் திமுக திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது, இந்த தகவல் ராகுல் காந்தியை மிகப்பெரிய அளவில் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனை தொடர்ந்து திமுகவிற்கும் காங்கிரஸ்க்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் சமீபத்தில் கனிமொழி – ராகுல் காந்தி இருவருடைய சந்திப்பு டெல்லியில் நடந்திருக்கிறது,. முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக இருக்கிறார் என்கின்ற தகவலையும் கனிமொழி ராகுல் காந்தியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து 40 தொகுதி 2 ராஜ்யசபா சீட்டு ராகுல் காந்தி கேட்க அதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இடம் பேசி தங்களுக்கு தகவல் தெரிவிப்பதாக கனிமொழி சென்னை திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் ராஜ்சப சீட்டுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை கடந்த முறை 25 தொகுதிகள் ஒதுக்கி இருந்தோம் இம்முறை 30 தொகுதிகள் ஒதுக்கலாம், இஷ்டம் இருந்தால் காங்கிரஸ் இருக்கட்டும் இல்லையென்றால் வெளியேறட்டும் என்கின்ற முடிவில் திட்டவட்டமாக முதல்வர் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் காங்கிரஸில் இருக்கக்கூடிய சுமார் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடர்களுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை: