இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த இருக்கிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளிவர இருப்பதால்தான் இந்த ஏற்பாடு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தில் தான் செய்த சண்டை சாகசங்களை ரசிகர்களுக்காக நேரில் செய்ய இருக்கிறார் சூர்யா.
வழக்கமாகவே சூர்யா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கஜினி, அயன், ஆதவன் படங்களைத் தொடர்ந்து ஏழாம் அறிவிலும் இசையமைக்கும் ஹாரிஸ் இசையில் மிரட்ட இருக்கிறாராம்.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிற போதே, மற்ற மூன்று படங்களில் தன் கௌரவத் தோற்றத்தை நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. அதில் முதன்மை வகிப்பது கமல், திரிஷா நடிப்பில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸுக்கு வெளியாக இருக்கும் 'மன்மதன் அம்பு'. இந்தப் படத்தில் திரிஷா ஒரு நடிகையாகவே நடிக்கிறார்.
அடுத்தது பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடித்து வரும் 'அவன் இவன்'. சூர்யாவின் வெற்றிப் பயணத்தில் இயக்குனர் பாலாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தப் படம், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் கோ. ஜீவா, அஜ்மல், பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்தில் சூர்யா ஒரு காட்சிக்கு வந்து போகிறார்.சமீபமான சூர்யாவின் படங்களில் அயன் படம் வசூல் சாதனை படைத்தது. அயன் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். அதனால்தான் 'கோ' படத்தில் இயக்குனர் கேட்டவுடன் மறுப்பு சொல்லாமல் ஒரு காட்சிக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா.
தயாநிதி அழகிரி வெளியிடும் சூர்யா நடித்த 'ரத்த சரித்திரம்' படமும் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக