யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞன் அங்கிருந்த மினி பஸ் ஒன்றை அடித்து உடைத்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனைக் கண்ட அருகிலிருந்த இராணுவ வீரர் ஒருவர், குறித்த இளைஞனை தடுக்க முயற்சித்த போது குறித்த இளைஞன் இராணுவ வீரரைத் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து அருகிலிருந்த மற்றுமொரு இராணுவ வீரர் துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞனை துப்பாக்கியால் சுட்டு உயிரிழக்கச் செய்துள்ளார்.
பஸ்களை உடைத்த குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலம் யாழ், போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக