வெள்ளி, 6 டிசம்பர், 2019

நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் புதிய தகவல்

என்கவுண்டர் செய்யப்பட்ட ஹைதராபாத் குற்றவாளிகள் மற்றும் தூக்குதண்டனை பெற்றுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள்நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் புதிய தகவல் மாலைமலர் :  நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? என முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் மற்றும் முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்
புதுடெல்லி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கொண்ட கும்பலால் கடத்திச்சென்று கற்பழித்து எரித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர்.;n அப்போது 4 பேரும் போலீசார் மீது கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கினர். மேலும், குற்றவாளிகளில் ஆரிப் என்பவன் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு சரமாரியாக சுட்டார்.


இதனால் போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயாவை ஆறுபேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. 

இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ம் தேதி அவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அனைவரும் தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டுமேன பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீரஜ் குமார் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை துரிதமாக கைது செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டான்.

இந்நிலையில், ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டது நாடுமுழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் நிர்பயா சம்பவம் நடைபெற்ற போது டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீரஜ் குமார் தனது நினைவுகளை இன்று பகிர்ந்துள்ளார். இது குறித்து கூறியதாவது:-

''நிர்பயா சம்பவம் நடைபெற்ற சமயத்தில் எங்கள் மீது நிறைய அழுத்தம் இருந்தது. அந்த குற்றவாளிகளை பசியுடன் இருக்கும் சிங்கங்களின் முன் வீசுங்கள், அவர்களை பொதுமக்கள் முன் நிறுத்தி எந்த விசாரணையும் இன்றி கொல்லுங்கள் என பல செய்திகள் எங்களுக்கு வந்தது. 

சட்டவிரோதமாக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எழவில்லை. மேலும், அந்த குற்றவாளிகளை கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு அப்போது வரவில்லை.

எல்லா என்கவுண்டரிலும் கேள்விகள் எழத்தான் செய்யும். ஐதராபாத் சம்பவம் பயங்கரவாதிகள், ரவுடிகள் என்கவுண்டர் அல்ல. இது பொதுமக்களின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளது. 

உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் தான் இந்த என்கவுண்டர் நியாயமாக நடைபெற்றதா? அல்லது இல்லையா? என்பது பற்றிய முடிவுகள் வெளியாகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: