மலையரசு- vikatan : தனி நாடு ஒன்றை நிர்மானிப்பதற்கு நித்யானந்தா நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் (4.12.2019 தேதியிட்ட) வெளிவந்த ஜூனியர் விகடனில் ‘எக்ஸ்க்ளூசிவ்’ செய்தி வெளியிட்டு இருந்தோம். நித்யானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, 'என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என்று குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் குழந்தைகளைக் கடத்தி சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக, நித்யானந்தா மீது குஜராத் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனர். ஆனால் நித்யானந்தாவோ வெளிநாடு தப்பிவிட்டார்.
தனித் தீவை நாடக அங்கீகரிக்கும் வேலைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்றைப் பணியமர்த்தியுள்ளார் நித்தி” என்று கூறியிருந்தார்கள். தற்போது தனி நாட்டுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக தனி இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் நித்யானந்தா. `கைலாஷ் நேஷன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தனது நாட்டுக்கென நந்தி அருகில் நித்தியானந்தா அமர்ந்திருப்பதுபோல் தனிக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒருநாட்டுக்கு தேவையான அனைத்தையும் அந்த இணையத்தில் பட்டியலிட்டுள்ளார்கள். இதைவிட ஒருபடி மேலே சென்று தனிநாட்டுக்கென டிஃபென்ஸ், கல்வித்துறை, சுகாதாரத்துறை என 9 துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. முத்திரையாக நித்யானந்தா பீடத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் தனி நாட்டுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியையும் வெளியிடப்பட்டுள்ளது. ``இந்துக்கள் அனைவரும் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள். இந்து மதத்தை பின்பற்ற விரும்பும் எவரும் இதில் அடங்கும். துன்புறுத்தப்பட்ட எந்த இந்துக்கும் கைலாசா ஒரு பாதுகாப்பான அடைக்கலம். அனைத்து புலம்பெயர்ந்த இந்துகளும் கைலாசாவுக்கு வரலாம்" என்பதுதான் தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இணையதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக