திங்கள், 2 டிசம்பர், 2019

இலங்கையில் தடைசெய்யப்பட்ட முதல் தமிழர் அமைப்பு இலங்கை திராவிட முன்னேற்ற கழகம்

அமிர்தலிங்கம் - செல்வநாயகம் -  இலங்கை  திராவிட முன்னேற்ற கழக  இளஞ்செழியன்
இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ஒரு இனவாத அமைப்பு , அந்த அமைப்பு இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயலும் சிங்கள விரோத கட்சி என்றும், தமிழக தி.மு.க-வின் கிளை அமைப்பு என்றும் கூறி, இ.தி.மு.க.வை தடைசெய்யும்படி பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தனர். 
 தி.மு.க-வின் தலைமை நிலையம் சென்னையில் உள்ளது என்றும், அதன் பெருந்தலைவர் சி.என்.அண்ணாதுரை என்றும், தி.மு.க. இந்த நாட்டைக் கைப்பற்றி, அதனை தமிழ்நாட்டோடு இணைப்பதே இவர்களது பிரதான நோக்கம்" என உண்மைக்குப் புறம்பான செய்திகளை காரணங்களாக பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். இ.தி.மு.க-வைத் தடைசெய்ய வேண்டும் என்பதை பாராளுமன்றத்தில் பேசிய சில இடதுசாரியினர்.....
வளன்பிச்சைவளன் : பதிவு - 167 : ஈழத்தில் மலையக தமிழ் மக்களும் ஈழமண்ணின் மைந்தர்களே எனவே தமிழர் உரிமைப் போராட்டத்தை இருவரும் இணைந்து நடத்துவதே சரியானது, தமிழர்களை சிறுபான்மையாக மாற்ற மலையகத்தமிழர்களின் குடி உரிமையை பறித்து நாடடற்றவர்களாக அறிவித்த சிங்கள இனவாத போக்கினை எதிர்க்க இருவரும் இணைந்து செயல்பட திட்டமிட்ட இதிமுக மலையகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமிழரசு கட்சி தலைவர்களை வரவழைத்து பேச வைத்தது. இது தென்னிலங்கை இன வாதிகளின் கண்ணை உறுத்தியது அவர்கள் வெகுண்டெழுந்து இதிமுக தமிழ் நாட்டில் உள்ள திமுக வுடன் இணைந்து இலங்கையை பிரித்து தமிழ் நாட்டுடன் இணைக்க முயல்கின்றனர் என வதந்தியை பரப்பி இதிமுகவை தடை செய்ய கிளர்ச்சிகள் நடத்தினர்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்ய பட்ட போது கூட திமுக மீது இவர்கள் பிரிவினைவாதிகள் இலங்கையில் தமிழீழம் அமைத்த பிறகு இங்கு தனிநாடு கேட்பார்கள் என தமிழகத்திலும் இந்திய அளவிலும் எதிர்பாளர்கள் பரப்புரை செய்தனர்.

இதிமுக மீதான தடையை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது, தடை தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது தமிழரசு கட்சி உறுப்பினர்கள் மௌளமானதும் தொண்டைமான் அமைதி காத்ததும் கசப்பான உண்மை.
ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை எனும் இளஞ்செழியனின் நூலில் இருந்து.
இதிமுகவை தடை செய்ய சிங்கள
இனவாதிகள் கூக்குரல்
இ.தி.மு.க. மீதான தடை!
வட, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்தி
ஒன்றுடன், இலங்கையின் வலிமை வாய்ந்த தொழிலாளவர்க்கம்
ஒன்று இணைந்து அரசியல் செயல்திட்டங்களை முன்னெடுப்பது
தென்னிலங்கை இனவாத அரசியல்வாதிகளின் பெரும்
விமர்சனத்துக்கு உள்ளாகியது. இ.தி.மு.க-வின் அழைப்பை ஏற்று
மலையகத்தில் தமிழரசுக் கட்சியினர் மாநாட்டில் கலந்துகொண்டு 126
மொழியுரிமை, குடியுரிமை தொடர்பில் உறுதியான தீர்மானங்களை
எடுத்தமை மிகவிரைவாக இனவாத சக்திகளின் அவதானத்துக்கு
உட்பட்டது. பேரினவாத அமைப்புகளின் பிரதிநிதிகளாக இருந்த,
வெலிமடை பாராளுமன்ற அங்கத்தவரும், தேசிய விடுதலை
முன்னணித் தலைவருமான கே.எம்.பி. இராஜரத்தினா பௌத்த
முன்னணியைச் சேர்ந்த மெத்தானந்த, தம்பதெனிய பாராளுமன்ற
உறுப்பினர் ஆர்.ஜி.சேனநாயக, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
இரத்தொட்டை பாராளுமன்ற உறுப்பினர் முணவீர போன்றவர்கள்
இ.தி.மு.க. ஒரு இனவாத அமைப்பு எனவும், அந்த அமைப்பு
இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயலும் சிங்கள
விரோத கட்சி என்றும், தமிழக தி.மு.க-வின் கிளை அமைப்பு
என்றும் கூறி, இ.தி.மு.க.வை தடைசெய்யும்படி பாராளுமன்றத்தில்
கோரிக்கையை முன்வைத்தனர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
உறுப்பினரான பேர்ஸி விக்கிரம ரத்தினாவும் சிங்கள அமைப்புகள்
முன்வைத்தக் கோரிக்கையை அங்கீகரித்துப் பேசினார். அவர்
பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ''கடந்த சில நாட்களாக
ஆளுங்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. அல்லது இலங்கை திர |
முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பைப்
கலந்துரையாடப்பட்டுள்ளமை எமக்குத் தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. அல்லது இலங்கை திராவிடர்
முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பைப் பற்றி
கலந்துரையாடப்பட்டுள்ளமை எமக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தக் கழகம் ஒரு சதிகார அமைப்பாகும். இந்த
அமைப்பினைச் சார்ந்த முக்கியமானவர்களை கைது செய்ய
முடியாது, ஆயினும், இந்த அமைப்பைத் தடைசெய்ய ஏன்
அரசுக்கு முடியாது என்று நான் கேட்கிறேன். ''இந்தியாவில்
இருக்கும் இந்த அமைப்பின் கிளையை இவர்கள் மலைநாட்டி'',
அமைப்பதன் மூலம் எவ்வாறான நடவடிக்கைகடை
மேற்கொள்வார்கள்! நாம் எவ்வாறான பிரச்னைக்கு முகம்
கொடுக்க நேரிடும் என்று யாருக்குச் சொல்ல முடியும்.
இதுதொடர்பாக அதிகமாக நான் பேசப் போவதில்லை '' என
தெரிவித்தார். கே.எம்.பி. இராஜரத்தினா, பேர்ஸி விக்கிரம ரத்தின,
நுவரெலியா பா.உ., வில்லியம் பெர்னாண்டோ உள்ளிட்ட
அனைத்து சிங்கள அமைப்புகளின் தலைவர்களும்
பாராளுமன்றத்தில் இ.தி.மு.க-வைத் தடைசெய்ய வேண்டும் என்ற
கோரிக்கையைப் பின்வரும் காரணங்களின் அடிப்படையில்
அங்கீகரிப்பதாகக் கூறினார். ''தி.மு.க-வின் தலைமை நிலையம்
சென்னையில் உள்ளது என்றும், அதன் பெருந்தலைவர்
சி.என்.அண்ணாதுரை என்றும், தி.மு.க. இந்த நாட்டைக்
கைப்பற்றி, அதனை தமிழ்நாட்டோடு இணைப்பதே இவர்களது
பிரதான நோக்கம்" என உண்மைக்குப் புறம்பான செய்திகளை
காரணங்களாக பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.
இ.தி.மு.க-வைத் தடைசெய்ய வேண்டும் என்பதை
பாராளுமன்றத்தில் பேசிய சில இடதுசாரியினர், அதே சமயம்
இந்திய வம்சாவளியினரின் பிரஜா உரிமைப் பிரச்னையும்
தீர்க்கப்படுதல் வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர். இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இதுதொடர்பாக
பேசுகையில், "ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
இ.தி.மு.க. செயல் நடவடிக்கைகளில் அதிகமாகக் கவலைப்படுவதை அவதானிக்கிறேன். நீங்கள் அது சம்பந்தமாக
பெரிதும் வலியுறுத்துகிறீர்கள். நானும் இ.தி.மு.க-வைப் பலமாக
ஆட்சேபிக்கிறேன். இ.தி.மு.க-வுடன் தமிழரசுக் கட்சியும் இணைந்து
தமிழ்மக்களது உணர்வைத் தூண்டிவருவது பற்றியும் நீங்கள்
அதிருப்தி அடைந்துள்ளதையும் காணமுடிகின்றது. அதேவேளை
1948-ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், மலையக மக்களின்
குடியுரிமைப் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்பது தெள்ளத்
தெளிவானதாகும். இதன் காரணமாக இலங்கைவாழ் இந்திய
வம்சாவளி மக்கள் நாடற்றவர்களாக இருக்கின்றனர். தற்போது
இரண்டு பிரதம மந்திரிகளுக்கு இடையில் மீண்டும் நடைபெற்ற
பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிட்டு வாதிக்கப் 127
போவதில்லை. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படை
நோக்கம் நாடற்றவர் பிரச்னைக்கு இறுதி முடிவெடுக்கப்பட
வேண்டும் என்பதை அழுத்திக் கூற விரும்புகின்றேன்' என பீட்டர்
கெனமன் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இலங்கை திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினை தடைசெய்யும்படி சிங்கள இனவாத
அமைப்புக்களும், ஏனைய கட்சியினரும் அரசாங்கத்தைக்
கடுமையாக நிர்ப்பந்தித்தனர். நியமன உறுப்பினராக இருந்த
தொண்டமானோ, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களோ
இ.தி.மு.க. தடை சம்பந்தமாக எந்தவிதமான கருத்துகளையும் கூற
திராணியற்றவர்களாகவும், பொம்மைகளாகவும் பாராளுமன்றத்தில்
அமர்ந்திருந்தனர்.
தமிழரசுக் கட்சியினரின் அநாகரீகமான இந்த அரசியல்
மௌனத்தை அறிந்த இ.தி.மு.க. பொதுச் செயலாளர் தோழர்
இளஞ்செழியன், தோழர் என்.எஸ்.நாகையாவுடன்
எம்.திருச்செல்வம், கியூ.ஸி வீடு சென்று சந்தித்ததோடு, அவருடன்
எஸ்.ஜே.வி செல்வநாயகத்தினையும் சந்தித்து இது குறித்து
விவாதித்தார். "தமிழரசுக் கட்சியை மலையகத்திற்கு அழைத்துச்
சென்றமையே, இ.தி.மு.க-வைத் தடை செய்ய வேண்டும் என
இனவாத சக்திகள் பாராளுமன்றத்தில் கொதித்தெழுந்ததற்கான
அடிப்படைக் காரணமாகும்.
தொடரும்.....

கருத்துகள் இல்லை: