nakkheeran.in - ப.ராம்குமார் :
தென்காசி
மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை
சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற
இந்துமதி (30). கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5)
மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில்
சின்னமுத்திரன் இறந்து விட்டான். 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புளியரை போலீசார் விசாரணை நடத்தி
வருகிறார்கள். உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு வீட்டின்
சுவரில் எங்கள் சாவுக்கு வறுமை மட்டுமே காரணம் என உருக்கமான வாசகம்
எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக