ஞாயிறு, 1 டிசம்பர், 2019

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் விபத்து: இருவர் உயிரிழப்பு! வீடியோ cctv


கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கோரவிபத்து: இருவர் பலி!மின்னம்பலம் : கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. வழக்கம்போல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி கட்டணம் வசூலிப்பது நடைபெற்றுள்ளது. அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்யும் மையம் ஒன்றின் மீது மோதியது. இதில் அந்த மையம் தூக்கி வீசப்பட்டது.

அதோடு முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீதும் லாரி மோதியது. இதில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சென்னப்பன், திருமலை நகரைச் சேர்ந்த பரிமளா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டண வசூல் மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரி ஓட்டுநரான சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: