திங்கள், 2 டிசம்பர், 2019

மலேசியாவில் 12 பேர் கைது .. சீமானின் புலி பிரசாரத்துக்காக பணம் சேர்ந்தார்கள்?


ஜீவா வனத்தையன் தமிழரிமா : விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் பரப்புரைக்கு பணமா? மலேசியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த 12 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த அக்டோபர் 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெரும் தொகை இவர்களின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, மலேசிய அரசு விழித்துக்கொள்ள மலேசிய போலீசார் அந்த 12 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் விடுதலைப் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும், மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் தொடர்பு உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக சீமான் மலேசியாவிற்கு பலமுறை வந்து சென்றதும், அவர்களை சந்தித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதவிர மலேசியாவில் உள்ள பல அரசியல் தலைவர்களையும் அவர் சந்திந்துள்ளதுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேரும், விடுதலைப்புலிகள் பெயரில் நிதி திரட்டியுள்ளனர். அவர்கள் மலேசியாவில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் இருந்தும் பணம் பெற்று உள்ளனர். அதேபோல விடுதலைப்புலிகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு கைது செய்யப்பட்ட 12 நபர்கள் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இவர்கள் மூலம், சீமான் நிதி வாங்கியது தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை கொண்டு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவு துணைத் கமாண்டர், டாடுக் அயோப் கான் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், சீமானுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விடுதலை புலிகள் அமைப்பை வலுப்படுத்துவதற்காக, சீமான் எவ்வளவு நிதி பெற்றுள்ளார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான முறை மலேசியாவிற்கு வந்துள்ளார். இங்கு பல அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும், சீமானுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் மலேசியாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்படும்.
கைது செய்யப்பட்ட 12 பேரும், மலேசியாவிலும் நிதி திரட்டி உள்ளனர். அதுபோல பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் நிதி திரட்டி உள்ளனர். மேலும், பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கும், தனிநபர்களுக்கும் அனுப்பி உள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் பணம் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கு மலேசிய கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான கூடுதலாக 45 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே சீமானுக்கு உள்ள தொர்பு குறித்தும் விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து சீமான் மீது நடவடிக்கைப் பாயும் நிலை உள்ளது.
எது எப்படியோ, விடுதலைப்புலி ஆதரவாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சீமான் ஈடுபட்டு வந்துள்ளதை மலேசிய அரசு வெளிப்படுத்தி உள்ளது.
வேறு எந்த வேலையும் செய்யாத சீமானால் எப்படி கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரில் வலம் வர முடிகிறது? தினமும் பல லட்சம் ரூபாயை எப்படி செலவு செய்ய முடிகிறது? நினைத்த போதெல்லாம் எப்படி விமானத்தில் பறக்க முடிகிறது? தினமும் கட்சி கூட்டங்களை எப்படி நடத்த முடிகிறது
எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் காலடியில் அமர்ந்து கொண்டு அவரை “அப்பா, அப்பா” என்று அழைத்து வந்தவர், எதற்காக திடீரென தனிக்கட்சி ஆரம்பித்தார்? எங்கிருந்து அவருக்கு பணம் வந்தது? எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடிகிறது? இவை எல்லாவற்றிர்க்குமான விடையைத் தேடி மலேசிய உளவுத்துறை கிளம்பியுள்ளது.
சீமான் 4 பொதுத்தேர்தலை தனித்தே நின்று களம் கண்டிருக்கிறார். சி.பா.ஆதித்தனார் வாரிசுகளிடமிருந்த நாம் தமிழர் கட்சி என்ற பேனரை குத்தகைக்கு எடுத்து தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு தேர்தல் களமாடும் சீமானுக்கு பணம் கொடுப்போர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை. அது எந்த வழியாக அவரை வந்தடைகிறது என்பதை இப்போது மலேசிய போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
சீமான் தன் வெற்று அரசியலுக்கு, திமுக எதிர்ப்பு அரசியலுக்கு திமுகவை பிடிக்காத பல கட்சிகள் உதவியிருந்தாலும் தேர்தல் முடிந்தவுடன் அவரை கழட்டி விட்டுவிடும் பிரதானக் கட்சிகள். ஆனாலும் சீமானின் அரசியல் பயணம் எந்த தடையும், அச்சுறுத்தலும் இல்லாமல் தொடர அவருக்கு கைகொடுப்போர் புலம் பெயர் ஈழ உறவுகள் தானா..? அல்லது அதற்கும் பின்னால் சிங்கள பேரினவாத அரசின் கையும் சேர்ந்திருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வரும்.
ஏன் இப்படி கேட்கிறோம் என்றால் சீமானின் பேச்சுக்கள் போராளிகளை போராளிகளாக சித்தரிக்காமல் அவர்களை அசைவப் பிரியர்களாக, சாப்பாட்டு ராமன்களாக, காட்டுக்குள் உல்லாசமாக வாழ்ந்தவர்களாக நிறுவுவதிலேயே குறிப்பாக இருக்கிறது. பிரபாகரனுக்கு தமிழக மக்களின் மத்தியில் இருக்கும் போராளி பிம்பத்தை உடைப்பதாகவே சீமானின் சமீப கால பேச்சுக்கள் அமைகின்றன.
-ஜீவா வனத்தையன் தமிழரிமா

கருத்துகள் இல்லை: