ஞாயிறு, 1 டிசம்பர், 2019

கனமழை ... வீடியோ ..சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

  நக்கீரன் கலைமோகன் தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடலூர், செங்கல்பட்டு, புதுவை, ராமநாதபுரம், காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: