செவ்வாய், 3 டிசம்பர், 2019

இலங்கை திராவிட முனேற்ற கழகத்தை தடைசெய்யப்பட்ட போது அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ... 22.07.1962

இளஞ்செழியன்

இலங்கை திராவிட முன்னேற்ற  கழகம்  மீதானஜனநாயக விரோதத் தடையினைக் கண்டித்து, அ.அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் நீண்ட உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சில முக்கிய பகுதிகள்.... "இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற  ஒரே இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
வளன்பிச்சைவளன் - பதிவு - 168 :  நள்ளிரவில் அவசர சட்டத்தின் கீழ் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தடை 
இதிமுகவை தடை செய்யக் கோரி  பௌத்த பிக்குகள் பிரதமரிடம் மனு மலையக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இணைக்க முன்றதால் இதிமுகாவிற்கு தடை !
அ.அமிர்தலிங்கம்
இளஞ்செழியன் ஆவேசத்தை தொடர்ந்து பாராளுமன்றத்தில் தடையை கண்டித்து அமிர்தலிங்கம் உரை
இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் வடக்கு கிழக்கு மலையக மக்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டது. இது சிங்கள இனவாதிகளுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. இதை முளையிலே கிள்ளி எறிய இ. தி.மு.க வை தடை செய்ய கிளர்ச்சி கள் மேற்கொண்டனர்.
பௌத்தபிக்குகளின் மூன்று சங்கங்களும் இணைந்து பிரதமரிடம் இ. தி.மு.க வை தடை செய்ய கோரி மனு கொடுத்தன.
சிங்கள இனவாத அரசு இ. தி.மு.க வை தடை செய்ய கூறிய காரணம் "மலையகத் தமிழ் மக்கள் 90 சதவீதம் தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் மூலம் 65 வீதம் பெற்றுக் கொள்வதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் மலையக மக்கள் இணைவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை கருத்தில் இ. தி.மு.க வை 18. 02. 1962 முதல் தடை செய்வதாகக் கூறியது.
சிங்கள இனவாதிகளை பொருத்த மட்டில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் இணைந்து செயல்பட கூடாது என்பதில் மிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட்டது. திராவிடர் இயக்க பார்வை கொண்ட இ. தி.மு.க இச்சதியை முறியடிக்க முயன்றதால் தடை செய்யப் பட்டது.

திராவிடர் இயக்க பார்வை அற்ற ஈழ தமிழ் தேசிய ர்கள் சதியை உணராமலும் அதை முறியடிக்கும் செயல் திட்டம் இல்லாததாலும் இறுதி வரை மலையக மக்களை இணைக்க எந்த ஆக்கபூர்வ முயற்சியை அன்றைய அறப் போராளிகள் எடுக்க வில்லை. ஆயுதப் போராட்ட காலக் கட்டத்தில் சில இயக்கங்கள் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம் எனக் கருதின ஆனால் அவர்களால் செயல் பட இயலவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் மலையக மக்கள் இணைந்த போராட்ட வடிவம் குறித்து சிந்திக்கவே இல்லை.

ஜெயவர்த்தனே காலத்தில் தமிழ் மக்களை பிரிக்கும் நோக்கில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நீங்கலாக முஸ்லிம்களுக்கு ஒரு மாகாணம் என மூன்றாக பிரிக்க திட்ட மிட்டது. இச் சிங்கள இனவாதி களின் சதியை முறியடிக்க ஈழ தமிழ் தேசிய வாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. தமிழ் முஸ்லிம்களை முயற்சி க்கவே இல்லை. விடுதலைப் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற எக் காலத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைய வாய்ப்பற்ற சூழலையே திராவிட இயக்கப் பார்வை அற்ற தமிழ் தேசியம் அரங்கேற்றியது.
ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை என்ற இளஞ்செழியன் நூலில் இருந்து.
நள்ளிரவில் இ திமுகவிற்கு தடை
பாராளுமன்றத்திலும்
வெளியிலும் இ.தி.மு.க. தாக்கப்படும்போது தமிழரசுக் கட்சி
உறுப்பினர்கள் அவர்களுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக
இருக்கிறார்களே அது ஏன்?'' என தோழர் இளஞ்செழியன்
ஆத்திரத்துடன் வினா எழுப்பினார். இதற்கு, தமிழரசுக் கட்சியின்
தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ''நான் இன்று எமது
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் மூலம் விளக்கம்
கேட்டு எழுதுகிறேன்'' என்று பதிலளித்தார். பின்னர், பாராளுமன்ற
உறுப்பினர்கள் தங்கும் சிராவஸ்திக்குச் சென்று,
அ.அமிர்தலிங்கத்திடம் தோழர் இளஞ்செழியன் காரசாரமாக
விவாதித்தார். "ஆத்திரப்பட வேண்டாம். எல்லாவற்றிற்கும்
பாராளுமன்றத்தில் பதிலளிக்கின்றேன்'' என்று அ.அமிர்தலிங்கம்
சமாதானம் கூறினார். பின்னர் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்கள் தி.மு.க-வுக்கு எதிரான வாதங்களுக்கு எதிராகப்
பேசத் தொடங்கினார்கள். இ.தி.மு.க. தடைபற்றிய
பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது லங்கா சமசமாஜ
கட்சித் தலைவர்களான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா,
தோழர்கள் பெர்னாட்சொய்சா, எட்மன் சமரக்கொடி போன்றோர்,
''எலியைப் புலியாக்கி, பிரச்னைகளைப் பெரிதாக்குவதை விட்டு,
மலைநாட்டு மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தி.மு.க-வை விமர்சனம்
செய்வதன் மூலமோ, தடை செய்வதன் மூலமோ பிரச்னை
தீராது!'' என வாதிட்டனர். 21.03.1964 அன்று வீரகேசரியில்
''இலங்கையில் இயங்கி வரும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத்
தடைசெய்யுமாறு கோரி ஆறு அம்ச மகஜர் ஒன்றினை அகில
இலங்கை பௌத்த குருமார்களின் மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த
மகாசங்க சபாவின் பௌத்த பிக்குகள் நேற்று பிரதமரிடம்
பிரதிநிதிகள் சபை கட்டிடத்தில் கையளித்தனர்'' என்ற செய்தி
வெளியானது. பாராளுமன்றத்திலும், வானொலி, பத்திரிகை என்பன
மூலமும் இ.தி.மு.க. சர்ச்சைக்குரிய அமைப்பா? இதிமுக வை தடைசெய்யக் கோரி பல இடங்களில் கிளர்ச்சிகளில்
ஈடுபட்டன.
''மலையகத் தமிழ்மக்களில் 90 வீதமானவர்கள்
தொழிலாளர்களாக இருப்பதாலும் அவர்கள் மூலம் 65 வீதமான
வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொள்வதன் மூலமும்
வடகிழக்குத் தமிழ்மக்களுடன் மலையகத் தமிழ்மக்கள்
இணைவதால் ஏற்படக் கூடிய விளைவுகளைக் கவனத்தில்
கொண்டு இ.தி.மு.க-வை தடைசெய்வதாக அரசாங்கம் அறிவித்தது.
18.07.1962 அன்று காலை பத்து மணிக்கு சி.பி.டி. சில்வா
தலைமையில் பாராளுமன்றக் குழு கூடியது. நுவரெலியா
பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் பெர்னாண்டோ 'தடைசெய்ய
வேண்டும்' என்ற பிரேரணையைக் கொண்டுவந்தா£. 22.07.1962
நள்ளிரவோடு அவசர கால சட்டத்தின் கீழ் இ.தி.மு.க. தடை
செய்யப்படுவதாக நாட்டின் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக
உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
''இலங்கையில் இயங்கிவந்த திராவிடர் முன்னேற்ற கழகம்
மூன்று பிரிவுகளும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தடை
செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பிரதம மந்திரி நேற்று
முன்தினம் வெளியிட்ட வர்த்தமானி அறிக்கையில், இந்த
இயக்கங்கள் தொடர்ந்து செயலாற்றுமாயின் நாட்டு மக்களிடையே
பிளவும், அமைதிக்கு அபாயமும் நேரிடும் எனக் கருதிய தாம்
இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.''
தடைசெய்யப்பட்ட அறிவித்தல் கிடைத்ததை அடுத்து
ஏ.எம்.அந்தோணிமுத்து தலைமையில் இயங்கிய தி.மு.க.
கலைக்கப்பட்டுவிட்டதாக பிரதமருக்கு அறிவித்தார்.
இரா. அதிமணி
தலைமையிலான தி.மு.க-வும் தன்னுடைய நடவடிக்கைகளைக்
கைவிட்டது. தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்தில் தமது
எதிர்ப்பைக் காட்டுவதற்கு முன்னரே இ.தி.மு.க. மீதான தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
எனினும் இ.தி.மு.க. மீதானஜனநாயக விரோதத் தடையினைக் கண்டித்து, அ.அமிர்தலிங்கம்
பாராளுமன்றத்தில் நீண்ட உரை நிகழ்த்தினார். அந்த உரையின்
சில முக்கிய பகுதிகள்....
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.
இந்த கௌரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க
விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தவர்களும் இந்த திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றி குறிப்பிட்டார்கள். கௌரவ
காலிப் பிரதிநிதி டபிள்யூ தஹா நாயக அவர்களும் திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி
ஏ.எப்.எம். மரைக்காயர் அவர்களும், நுவரெலியா பிரதிநிதி
வில்லியம் பெர்னாண்டோ அவர்களும் குறிப்பிட்டார்கள்.
வெலிமடைப் பிரதிநிதி கே.எம்.பி. இராஜரத்தினாவும், அவரது
பாரியார் குசுமா இராஜரத்தினாவும் இ.தி.மு.க-வுக்கு எதிராக
கர்ஜனை செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுபிட்டி
பிரதிநிதி பேர்ஸி விக்கிரம சிங்க அவர்களும் பிரஸ்தாபித்தார்கள்.
இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை
நான் குறிப்பிட வேண்டியதாகிறது.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று
தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கையில்
சர்வகலாசாலையில் 1946 - 47-ம் ஆண்டளவில் கல்வி
கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இ.தி.மு.கழகம் இருந்தது.
கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கழகம் இந்த நாட்டில் இயங்கி
வருகின்றது.
அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற
மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாக சாதியின்
பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும்
என்பதேயாகும்.
மூட நம்பிக்கையில் சிக்கி, காடனையும் மாடனையும் வணங்கி,
பலியிட்டுக் கூத்தாடி வாழும் மூட நம்பிக்கையில் இருந்து
அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதாகும். மலைநாட்டு மக்கள்
தன்மானம் பெற்றவர்களாக, பகுத்தறிவுப் பாதையில் செல்ல
வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இ.தி.மு.க. இயங்கி வருகிறது.
பெயரளவில்தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கும் இ.தி.மு.க-வுக்கும் ஒற்றுமை
இருக்கிறதே தவிர, ஸ்தாபனரீதியாக தொடர்பு எதுவும் இல்லை
என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூற வேண்டியது என்
கடமையாகும்.
இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாதுரை
அவர்களும், செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களும், இலங்கை
திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கும் தங்களுக்கும், எதுவிதமான
தொடர்பும் கிடையாது என்பதை எல்லோருக்கும்
கூறியிருக்கிறார்கள்.
இ.தி.மு.க. என்ற பெயரில் மூன்று
ஸ்தாபனங்கள் இருந்தாலும், இரண்டு ஸ்தாபனங்கள்
கொழும்பில்தான் இருந்துவருகின்றன. தோட்டப்பகுதியில் இருக்கும்
மற்றொரு ஸ்தாபனம் திருவாளர் இளஞ்செழியன் என்பவரைச்
செயலாளராகக் கொண்டது.
அவர்களுடைய நோக்கம் நாட்டைப்
பிரிப்பதல்ல. இ.தி.மு.க-வின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான்
என்று யாராவது நிரூபிப்பார்களேயானால், நான் என்னுடைய
பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய ஆயத்த
இருக்கிறேன்!
தொடரும்...

கருத்துகள் இல்லை: