புதன், 4 டிசம்பர், 2019

திரு .அமிர்தலிங்கம் : இ தி மு க சாதியேற்ற தாழ்வு நீங்கி ஒரின மக்களாய் வாழவைக்க முயன்றது... வரலாறு

வளன்பிச்சைவளன் : பதிவு - 169 : ஈழப் போரும் தமிழக ஈழத்தமிழரின்பொறுப்பும் கடமையும் 
சாதியேற்ற தாழ்வு நீங்கி ஒரின மக்களாய் வாழவைக்க முயன்றது இதிமுக பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் எறும்புகளுக்கு கூடபுற்றுஉண்டு #மலையக மக்களுக்கு அதுவும் இல்லை
சில்வாக்களும் செல்வாக்களும்  மலையத்தில் ஆளுமை செய்ய  முடியாது இளஞ்செழியன்! ஈழத்தில் சாதிய ஏற்ற தாழ்வு நீங்க மூடநம்பிக்கைகள் அற்ற சமூக சமத்துவ சமுதாயம் அமைக்க பாடுபட்டதே இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வமைப்பு தமிழ் மக்களை ஓரின மக்களாக வடக்கு கிழக்கு மலையகம் என்ற பேதமின்றி இணைக்க முற்பட்டதும் தமிழ் மக்களை சிறுபான்மை மக்களாக அடக்கி ஆளும் தங்கள் பெரும் பான்மை பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதாக அஞ்சிய சிங்கள இனவாதிகள் இ. தி.மு.க வை தடை செய்தனர்.


இ.தி.மு.க-வின்  நோக்கம் மலைநாட்டுத் தமிழ்த்
தொழிலாளர்களை சாதி பேதத்திலிருந்து மீட்டு, அவர்களை ஓரின
மக்களாக ஒன்று படச்செய்வதேயாகும். ஒருவரை ஒருவர்
தொடக்கூடாது என்றும், அவர் அந்தச் சாதி, இவர் இந்தச்
சாதியென்றும் பிளவுபடுத்தப் பட்டிருக்கும் மக்களிடையேயுள்ள
பேதத்தை அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது பிழையா?
அரசாங்க கட்சியில் உள்ளவர்களானாலும் சரி, எதிர்க்கட்சியில்
உள்ளவர்களானாலும் சரி! இந்த நோக்கம் பிழையானது எனக்
கூறுவார்களா?


மக்கள் மதத்தின் பெயரால் எத்தனை எத்தனையோ
மூடநம்பிக்கைகளுக்கு உட்பட்டுக் கிடக்கிறார்கள். மற்றவர்களிலும்
பார்க்க, கூடுதலாக படிப்பறிவற்றத் தோட்டத் தொழிலாளர்கள்
தான் மூட நம்பிக்கை என்ற கோரப்பிடியில் சிக்கிக்
கிடக்கின்றார்கள். கடவுள் ஒருவர் உண்டு, ஆனால், அதற்காகப்
பலியிடத் தேவையில்லை எனக் கூறுவது பிழையா? இ.தி.மு.க.
நிறுவப்பட்டதன் நோக்கமே இதுதான். அடுத்தது அரசாங்கம்
செய்த அக்கிரமான செயல்களால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே
விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் இழந்தவைகளையும்
பெற்றுக்கொடுப்பது. அதுதான் அவர்களை எந்தவிதமான
உரிமையும் அற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கும் அநியாயத்தை
எதிர்த்து அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பது
இவர்களது சங்கற்பமாகும். அம்மக்களுக்கு தொழிலுமில்லை
துணையுமில்லை.

#எறும்புக்கு கூட புற்று உண்டு
கல்வியையும், இனிமேல் புதுக் கல்வித் திட்டத்தின்படி
சிங்களத்தில்தான் அவர்களும் கற்கவேண்டும். தமிழர்களுக்கு
இந்த நாட்டில் பிரஜா உரிமை இல்லை. வாக்குரிமை இல்லை.
அவர்கள் துரத்தப்பட்டால் தங்கியிருப்பதற்கு ஓர் இடம்தானும்
இடமுண்டு.
இல்லை. மிருகங்களுக்குக்கூட காட்டில்
எறும்புகளுக்குக் கூட புற்றுகள் இருக்கின்றன!''
இந்த நாட்டின் வளத்துக்காக உழைத்து வந்த தொழிலாளர்கள்
நேற்று இன்று வந்தவர்கள் அல்ல. எத்தனை எத்தனையே
தலைமுறைகளாக இந்த நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் இவ்வா
அ.அமிர்தலிங்கம் ஆற்றிய உரையைத் தொடர்ந்து தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர் சிலர் இ.தி.மு.க. தடை நியாயம் அற்றது
இந்த நாட்டின் வளத்துக்காக உழைத்து வந்த தொழிலாளர்கள்
நேற்று இன்று வந்தவர்கள் அல்ல, எத்தனை எத்தனையோ
தலைமுறைகளாக இந்த நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் இவ்வாறு
அ.அமிர்தலிங்கம் ஆற்றிய உரையைத் தொடர்ந்து தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர் சிலர் இ.தி.மு.க. தடை நியாயம் அற்றது
என உரையாற்றினார்கள்.

இ.தி.மு.க.வின் மீதான தடையை வரவேற்ற கம்யூனிஸ்ட்
கட்சியினரும், கண்டித்த லங்கா சமசமாஜ கட்சியினரும் மலையக
மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும்
என்ற கருத்தினை வலியுறுத்தினர். இ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கான
உடனடி காரணமாக அமைந்த இந்தப் பிரச்னையைத் தீர்க்க
வேண்டியது அரசின் அவசிய அவசரமான கடமை என்பதை
விளங்கப்படுத்தினர். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம். இராஜமாணிக்கம் பேசும்போது "ஏறக்குறைய பதினாறு
வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த இலங்கை திராவிடர்
முன்னேற்றக் கழகத்தைத் தடை செய்து இந்த அரசாங்கம்
பெரும்பான்மை மக்களிடையே பொய்யான வதந்திகளைப்
பரப்பியுள்ளது. சமூகப் பொருளாதாரத் துறைகளில் அபிவிருத்தி
காண பாடுபட்ட ஒரு ஸ்தாபனம் அபாயகரமான ஒரு ஸ்தாபனம்
என்று பெயர் சூட்டப்பட்டது என்றும், இந்திய திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பெயரைச் சூட்டிக்கொண்ட பாவத்தினால்
இலங்கை தி.மு.க-வுக்கும் வீணே அவப்பெயர் ஏற்பட்டது' என்றும்
கூறினார்.
''தமிழக திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர்
என்.வி.நடராஜன் ஒரு பேட்டியில், இலங்கையில் தி.மு.க. தடை
செய்யப்பட்டிருப்பதைப் பற்றி பிரஸ்தாபித்தபோது, ''இலங்கை
திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கும் இந்திய தி.மு.க-வுக்கும்
எவ்விதத் தொடர்பும் இல்லை !'' எனக் கூறியுள்ளார்.
தமிழக
தி.மு.க.வின் செயலாளர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாக
கூறியிருக்கையில் இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு
இருப்பதாக கற்பித்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை
வெறும் அநீதியாகும்!'' எனக் குறிப்பிட்டார்.

வவுனியா தமிழ்  காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம், "பத்து
லட்சம் தோட்டத் தொழிலாளர்களையும் வெட்டி, தேயிலைச்
செடிகளுக்குப் பசளையாகப் புதைத்துவிட்டால் இந்தப் பிரச்னையே செடிகளுக்குப் பசளையாகப் புதைத்துவிட்டால் இந்தப் பிரச்னையே
எழாது. ஆகவே, கொடுங்கள்... வெலிமடைப் பிரதிநிதியிடம்...
வெட்டித் தள்ளிவிடுவார்!'' என்று காரசாரமாகவே தனது
கருத்தினைக் கூறினார்.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த டாக்டர்
நாகநாதனும் இது குறித்து உரையாற்றினார். இ-தி.மு.க
தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தோழர் ஏ.இளஞ்செழியன்
உட்பட ஏனைய செயற்குழுவின் தோழர்களும் தலைமறைவு
வாழ்க்கையினை மேற்கொண்டதுடன், வெவ்வேறு பெயர்களில் பல
மன்றங்களை உருவாக்கி, தமது செயல்பாடுகளை
முன்னெடுத்தனர். பகுத்தறிவு மன்றம், அண்ணா மன்றம்,
பாரதிதாசன் மன்றம், மறுமலர்ச்சி மன்றம், கதிரவன் கலைக்கூடம்,
அகில இலங்கை வாலிபர் முன்னணி, திருவள்ளுவர் மன்றம்,
குறிஞ்சிக் கூடம், மலையக அறிவகம், கருணாநிதி பொதுப்பணி
மன்றம் போன்ற மன்றங்கள் இ.தி.மு.க. தோழர்களினால்
ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

சுதந்திரமாக கூட்டங்கள் நடத்தப்பட முடியாத நிலையில்
திருமணம், காதணி விழா (காது குத்துதல்) நினைவஞ்சலிக்
கூட்டங்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், சொற்பயிற்சி
மன்றங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், நினைவுச்
சொற்பொழிவுகள் என்பன மூலம் தோழர்கள் கொழும்பு, கண்டி,
மாத்தளை, ஹட்டன், பதுளை, பண்டாரவளை, புசல்லாவை,
அப்புத்தளை, பாசறை, நாவலப்பிட்டி, இரத்தினகிரி, இறக்குவானை,
எட்டியாந்தோட்டை போன்ற இடங்களில் கழகப் பிரசாரங்களையும்,
சிற்றேடுகள், நூல்கள் வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளையும்
மேற்கொண்டனர்.

இதே நிலை வடக்கு, கிழக்கிலும் தொடர்ந்து
நடைபெற்றன. கொழும்பில் 'முத்தமிழ் மறுமலர்ச்சி மன்றம்'
"இலங்கை வாலிபர் முன்னணி' ஆகிய இரு அமைப்புகளின்
ஊடாகவும் தோழர்கள் ஏ.வைத்தியநாதன். அ.தங்கையா,
மலைத்தம்பி, எஸ்.நடராசன், அந்தனி, ஜீவா, எஸ்.மயில்வாகனம்
போன்றோர் மலையகத்திலும், ஏனைய இடங்களிலும் தனியார்
பள்ளிகளிலும் பல இயக்க நிகழ்ச்சிகளை நடத்தி, கழகச்
செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். இலங்கை திராவிடர்
முன்னேற்றக் கழகத்தைத் தடைசெய்தமையைக் கண்டித்து, யாழ்
நகர உதவி மேயர் ஆ.துரைராசசிங்கம், யாழ் மாநகர சபையில்
கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவிஞர் பி.ஆர்.பெரியசாமிக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில்,
இ.தி.மு.க. தடைசெய்யப்பட்ட பின்னர், முதல் தடவையாகக் கழகத்
தோழர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்து கொண்டுச்
செயலாற்றினர். கொழும்பில் இயங்கும் நாற்பது மன்றங்கள்
ஒன்றிணைந்து ஏற்பாடுச் செய்த, இந்த விழாவில், ஊர்
காவல்துறை எம்.பி-யான பண்டிதர் கா.பொ, இரத்தினம் தலைன
தாங்கினார்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம்
மு.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், இரா.சிவலிங்கம்,
தோழர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவில் தாங்கரை.ெெப.ம.மசபலநாயகம், அ.அமரதங்கம்.
மு.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், இரா.சிவலிங்கம்,
தோழர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவில்
உரை நிகழ்த்தினர். தோழர் இளஞ்செழியன் பேசுகையில்,
''மலைநாட்டு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற கரங்கள்,
சில்வாக்களின் கரங்களாக இருந்தால் என்ன, செல்வாக்களின்
கரங்களாக இருந்தால் என்ன? ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும்
கரங்களில் ஏந்தியுள்ள வாள்களால் ஆதிக்கத்தைத் துண்டித்து
விடுவார்கள்..!” என்று குறிப்பிட்டார். இளஞ்செழியன் தொடர்ந்து
பேசுகையில், "நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர்
வெறுங்கூலிகளாகவும், அடிமைகளாகவும் கொண்டுவரப்பட்ட
மக்களிடம் அறிஞர்கள் தோன்றிவிட்டார்கள். பி.ஆர்.பெரியசாமி
போன்ற மகத்தான மக்கள் கவிஞர்கள் தோன்றிவிட்டார்கள்.
இரா.சிவலிங்கம் போன்ற பட்டதாரிகள் தோன்றிவிட்டார்கள்.

#மலைய கமக்களை இனியும் ஆதிக்கம் செலுத்த முடியாது
இனியும் மலையக மக்களை அடக்கி, ஆதிக்கப்படுத்தி
வைத்திருப்பதை அவர்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.
இதனை விளங்கிக்கொள்வது நல்லது. விளங்கிக்கொள்ள
முடியாவிட்டால் ஆதிக்கம் செலுத்த எத்தனிக்கும் கரங்களுக்கு
எதிராக வீசப்படும் வாள்களுக்கு இரையாக வேண்டியதுதான்!''
தமிழரசுக் கட்சியினர், இ.தி.மு.க. தடை செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, மலையகத்தில் 'இலங்கை தொழிலாளர் கழகம்' என்ற
பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்தனர். இதனைக்
கருத்தில் கொண்டே தோழர் ஏ.இளஞ்செழியனின் உரை
அமைந்திருந்தது.
இளஞ்செழியனின் உரையின் சாராம்சத்தை
விளங்கிக்கொண்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகம், இந்த விழாவில்
உரையாற்ற மறுத்துவிட்டார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தோழர்
இளஞ்செழியனின் பேச்சுக்குப் பதிலளித்து உரையாற்றுமாறு
மு.சிவசிதம்பரத்தைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, சிவசிதம்பரம்
உரை நிகழ்த்தினார். தனது உரையில், ''மலைநாட்டு மக்கள் மீது
ஆதிக்கம் செலுத்திட நாங்கள் வரவில்லை, செலுத்தும் நோக்கமும்
எமக்கில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில், மலைநாட்டு
தமிழ்பேசும் மக்களோடுத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம்.
எங்களுக்கு எவ்வித சுயநலமும் இல்லை !'' எனக் குறிப்பிட்டார்.
தொடரும்.......

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

இது சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கு உங்களுடன் தொடர்பு கொள்ள இயலுமா.

இரதாதினேஸ்வரி பெரியசாமி

Unknown சொன்னது…

ratna.coral@gmail.com.

Kindly contact me. I need some more details in this regard.

Thank you.

Rathneswari Periyasamy