Muralidharan Pb :
1996-2001
காலகட்டத்தில் திமுக தமாக உறவில் சற்று விரிசல்
ஏற்ப்பட்டிருந்த நேரம், முதல்வர் கலைஞர் எவ்வளவோ சிறப்பாய் ஆட்சியை நடத்தியும் தமாகவினர் குற்றம் கூறியே காலம் கடத்தினர்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு என சில புதிய பஸ்ரூட் என பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருந்தது கலைஞர் அரசு. தனது தொகுதிக்குண்டான பேருந்துகள் போதாது மேற்கொண்டு சில ரூட் கொடுத்திட வேண்டும் என தமாக புரசை சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன் அவர்கள் கேட்டிருந்தார்.
அவரது கோட்டா முடிந்ததும் அதிகாரிகள் மேற்கொண்டு கொடுக்க இயலாது என்றனர்.
கலைஞர் அறிவித்தபடி திருவிக நகர் பேருந்து நிலையம் வந்து அவர் கேட்டபடியே புதிய வழித் தடங்களை கொடுத்து ஒதுக்கீடு பற்றி குறிப்பிட்டார். தனது தொகுதிக்கான ஒதுக்கீட்டில் ரங்கநாதன் அவர்களுக்கு விட்டுத் தருவதாக கூறினார்.
இதில் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார் ரங்கநாதன். ஏனெனில் கலைஞர் முதல்வர். அரசு ஒதுக்கி கொடுத்தது கலைஞருக்கான பேருந்து ஒதுக்கீட்டில் இருந்து. எலியும் பூனையுமாக இருந்த உறவை கலைஞர் சிக்கலாக்காமல் இறங்கி வந்தார். எதிர்கட்சிட்காரர் மனதினை வென்றார்.
இந்த நினைவூட்டல் ஏன்?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் அரசகுமார் எப்படி பேசுவார் என்பதை நாம் பார்த்திருப்போம். அவரையே வாயடைத்து புகழ்ந்து பேசும்படியாக செய்திருப்பது தளபதி ஸ்டாலின் என்ற தலைவரின் ஆளுமை. சும்மாவா 39 தொகுதிகளில் பெரிய வெற்றியடைந்து இன்று வரை இந்தியாவில் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே.
தந்தையை போலவே மகனும் இதயங்களை வென்றுள்ளார்.
இந்த இடத்தில், வாயார பாராட்டி பேசிய அரசகுமாரையும் அவரது மேடை நாகரீகத்திற்காக பாராட்ட வேண்டும்.
அரசியல் வெற்றிடம் என பேசி வருபவர்கள் ஓரமாய் போய் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கிட்டத்தட்ட 1980 வரை இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்தில் இருந்தது. அத்தி பூத்தார் போல் இன்று மீண்டும் வந்திருப்பது நல்லதே. சுட்டுப் போட்டாலும் அடிமைகள் வாயிலிருந்து இதை எதிர் பார்க்க முடியாது.
நாகரீகம் தொடரட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக