soodram.com : சீமானிடம் ஆயுதம் இருந்திருந்தால் இங்கும் இலங்கையில்
நடந்த அதே சகோதர அழித்தொழிப்பு முதலில் நடத்தப்பட்டு அன்பான சர்வாதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்..
சீமான் இப்போது தமிழ்நாட்டில் ஈர்த்திருக்கும் இளைஞர்களைப் போலப் பிரபாகரன் இலங்கையிலிருந்த முப்பது லட்சத்துக்குக் குறைவான தமிழர்களில் (அன்றைய மக்கள் தொகை )
மூன்றில் ஒரு பங்கு தமிழர்களிலிருந்த பல இளைஞர்களை ஈர்த்தார். அவர் ஆயுதம் ஏந்திய போது அவருக்கு இருந்த ஆதரவு இங்குச் சீமானுக்கு இருக்கும் ஆதரவைப் போன்ற ஒன்று தான் . ஆயுதம் இருந்ததால் எதிராக இருந்த அரசியல்வாதிகள். போராளிகள் என அனைவரையும் அழித்தார்.
பிரபாகரன் எடுத்த பல அரசியல் முடிவுகளும் சீமான் செயல்படுத்தப் போவதாகக் கூறும் பல அரசியல் முடிவுகளைப் போன்றவை தான்.
சகோதர படுகொலைகள்…
சயனைடு தற்கொலைகள்…
மனித இன அழித்தொழிப்பு என்பதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளை யாரும் ஆய்வு செய்ய மறுப்பது விந்தையாக இருக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் இன்று மிகப் பலவீனமான சூழலில் இருக்க இது மிக மிக முக்கிய காரணம்.
எல்லா கட்சிகளிலும், எல்லாவிதமான இயக்கங்கள், கருத்தாக்கங்களில் இருக்க மக்களுக்கு உரிமை உண்டு. அவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் ஆயுத ரீதியாக எதிர்கொண்டால் பெரும் பாதிப்பு மொத்த சமூகத்துக்கும் வந்து சேரும்.
இதை நாம் புலிகளின் அநாகரிகமான அரசியலின் ஊடாக கண்டோம்…
லக்ஷ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம், ரஜினி திரணகம என அரசியலில் இருந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர்.
சக போராளி இயக்கங்களின் தலைவர்கள், எளிய மக்களின் இயக்கத்தின் தலைவரான தோழர் பத்மநாபா…
உமாமகேஸ்வரன்..
சிரீசபாரத்தினம் உட்பட தமிழின் போராளித் தலைவர்கள்…
போராளிகள் ,உடன் பல்லாண்டு பணிபுரிந்த புலிகள் இயக்க தலைவர்கள்…
புலி இயக்க போராளிகள் என படுகொலை செய்யப்பட்டனர்.
ரஜினி காந்த் ரசிகர்கள் போல…
புலிகளின் ரசிகர்கள் இன்னும் பிரபாகரன் எனும் ஹிட்லரை தமிழினத்தின் ஒட்டு மொத்த தலைவராக படம் காட்டுவதுதான் நகைப்பிற்குரியதாக இருக்கிறது…
(இராமச்சந்திர மூர்த்தி.பா)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக