- அ.கரீம் : “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”
“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி.
மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை(2.12.19) இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை மிக கவனகமாக காவல்துறை செய்துள்ளது. அந்த ஆகால மரணத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தவிர கூடியிருந்த பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் வேறு எந்த கோரிக்கையையும் பிரதானமாக எழுப்பவில்லை. அவரை கைது செய்யும்வரை உடலை வாங்க முடியாது என்று சொன்னார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருவதற்கு முன்பு அனைத்து கூட்டத்தையும் கலைக்க வேண்டும் என்பதில்தான் காவல்துறை குறியாக இருந்துள்ளது.
வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் கூடிய பொதுமக்களை எப்படியும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் காவல்துறைக்கு இருந்ததின் விளைவே அந்த திடிர் தாக்குதல்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களைத்தான் “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” என்று மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி கூறினார். அப்போது அவர்கள் சொன்ன பதில் “நாங்கள் சோத்தைதான் திங்கிறோம், வேறு எதுவையும் அல்ல” என்றும் “எங்கள் வீட்டிலும் இதேபோல சின்ன குழந்தைகள் உள்ளது” என்று சொல்லி உள்ளனர்.
திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ முன்னணி தலைவர் கார்கி உள்ளிட்ட 12 நபர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்ததும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 12 நபர்கள் மீது கைது செய்து தனி வழக்கும் மேட்டுப்பாளையம் காவல்துறை பதிவு செய்து கைது செய்தது.
அப்போதுதான் “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?” என்று சொல்லி நாகை திருவள்ளுவனை டி.எஸ்,பி. மணி அடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களையும் காவல்துறை அணுகும் முறை எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் நியாமான உரிமைகளை கூட கேட்க கூடாது என்பது ஜனநாயக வன்முறையே. பாதிக்கப்பட்ட நபர்கள் மீதே வழக்கு பதிவு செய்வது சட்டத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும். ஒரு பதட்டமான சூழலில் கவனமாக செயல்பட வேண்டிய அரசு எதற்கு அவசர அவசரமாக கூட்டத்தை கலைப்பதையும், இரவோடு இரவாக அனைத்து உடல்களையும் எரிப்பதும் எதனை மறைக்க அல்லது யாரை காப்பாற்ற என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது.
காவல்துறை நடந்துகொண்ட முறை எல்லோருக்கும் தெரியும், எல்லா தொலைக்காட்சியும் ஒலி பரப்பியது. ஆனால் கைது செய்தவர்கள் மீது பொது சொத்துக்கள சேதப்படுத்திய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எதனை சேதப்படுத்தினார்கள் என்று நீதிமன்றத்தில் கேட்டபோது ஒரு போலிசின் பைக்கை சேதப்படுத்தினார்கள் என்று காவல்துறை தரப்பு சொல்கிறது. அதற்கான ஆதாரம் கேட்டபோது இதோ வருகிறேன் என்று ஒரு போலீஸ்காரர் வெளியே சென்று இரண்டு கற்களை எடுத்து வந்து கொடுக்கிறார். “என்ன இது” என்று கேட்ட போது ‘இந்த கல்லை வைத்துதான் பைக்கை அடித்தார்கள்’ என்று காவலர் சொல்கிறார் (இதைத் தான்(கற்களை) அந்த மூளையில் தேடிக்கொண்டு இருந்தீர்களா”). அந்த கல்லின் வரலாறு புவியியல் எல்லோருக்கும் தெரிந்த பின்பு நீதிபதியே “பொது சொத்தை சேதப்படுத்திய பிரிவு, மற்றும் அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவையும் நீக்குகிறார். சாதாரண பிரிவில் நீதிபதி காவல் அடைப்பு ஆணையை பிறப்பிக்கிறார்.
கோவம் கொண்ட காவல்துறை ஓரிரு நாளில் அனைவரும் வெளியே வந்து விடுவார்கள் என்று தெரிந்தபின்பு கோவை சிறையில் அடைக்க வேண்டிய வெண்மணி உள்ளிட்டவர்களை 1500 பேரை வைக்கும் அளவு கொண்ட கோவை சிறையில் இந்த 12 பேரை வைக்கும் அளவுக்கு இடமில்லை உடனே அவர்களை சேலம் சிறைக்கு அழைத்து போவது அதிகாரத்தின் உச்சம்.
டி.எஸ்.பி.மணி தலைமையில் நடந்த மனித உரிமை மீறலை(சாதி பெயரை சொல்லி அடித்தது உட்பட அனைத்தையும் புகாராக எழுதி நீதிமன்றதில் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிபதி நியாயம் உணர்ந்து மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிங்கர்களின் பணி அற்புதம். “நம் கற்கும் கல்வி நமது சமூகத்துக்கு பயன்பட வேண்டும்,அதுவே பெற்ற கல்வியின் பயன் ” என்ற சட்ட மேதை அம்பேத்கர் வரிகளை நேரம் உணர்ந்து நடைமுறைப்படுத்திய அனைத்து தோழமைகளின் பணியும் அற்புதம்.
- அ.கரீம்
Kareem Aak

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக