புதன், 4 டிசம்பர், 2019

மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை’ சுவர்: ஸ்டாலின் நேரில் சென்று .. வீடியோtamil. samayam : மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து விபத்துக்கு உள்ளானதில் நேற்று காலை நான்கு வீடுகளில் வசித்துவந்த 17 பேர் பலியாகினர். சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியன் தலித் குடியிருப்பு தனது பார்வையில் இருக்கக்கூடாது என்பதற்காக 20 அடி உயரத்தில் தீண்டாமை சுவர் போன்று எழுப்பியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 80 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் கருங்கற்களால் எழுப்பட்ட இந்த சுவர் தூண்கள் ஏதும் அமைக்கமால் கட்டப்பட்டிருந்தது.
விரிசல் விழுந்த அந்த சுவரின் அடியில் நீர் தேங்குவதாலும், தாழ்வான பகுதியில் இருக்கும் தங்களது வீட்டின்போல் எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலை இருக்கும் என்பதாலும் நான்கு வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டின் உரிமையாளரிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதை அதிகாரிகளும், வீட்டின் உரிமையாளரும் அலட்சியம் செய்துள்ளனர்.
கவிதா சொர்ணவல்லி : 17 அருந்ததியர்கள் கொல்லப்பட்டது பற்றி, பிஎஸ்பி சார்புள்ள யானைக்குட்டிகள், பவுத்த சார்புள்ள சங்கி மங்கிகள், பறையர் பெருமை / பள்ளர் பெருமை பேசும் சாதிவெறி நாய்கள், இது போக தலித் இன்டெல்ஸ்ன்னு சொல்லுற சைக்கோக்கள் எல்லாம் எதுவுமே பேசாம, கம்முனு கிடக்குரானுங்க ?

ஒருத்தன் என்னடான்னா சோறு திங்குற படம் எடுத்து ஷேர் பண்ணிட்டு இருக்கான் ? ஏண்டா நீங்கல்லாம் அந்த சோறுதான் திங்குரீன்களா ? ஏண்டா இப்படில்லாம்..

கருத்துகள் இல்லை: