திங்கள், 2 டிசம்பர், 2019

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்... அறிவிப்பு வெளியானது

tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு இன்று தேர்தல் நடக்க உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதன்பின வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு இன்று தேர்தல் நடக்க உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

இதன்பின வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும் வார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக கூட்டம் நாள் ஜனவரி 11.div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

கருத்துகள் இல்லை: