எச்.ராஜா துண்டுதல் பேரில் அவரின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். விவசாயிகள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் எச்.ராஜா தான் காரணம் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மனைவிக்கு திடீர் இருதய அடைப்பு ஏற்பட்டு திருச்சி ஏபிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் கேட்டு விமானம் மூலம் திருச்சி வந்தவர் மனைவியை பார்த்துவிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
1 கோடி ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயி தற்போது நடுத்தெருவில் நிற்கிறான். அடுத்த வருடம் விவசாயம் செய்வதற்கு பொருட்களை தருகிறொம் என்கிறார். இப்போது விவசாயத்தில் நஷ்டம் அடைந்து சகக்கிடக்கிறான் அவனை காப்பாற்ற வழியில்லை.
இதற்காக தான் கடந்த 10 நாட்களாக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறோம்.
கடந்த 2 நாளில் மட்டும் 500க்கு மேற்பட்ட மர்ம மிரட்டல் தொலைபேசிகள் வந்து கொண்டிருக்கிறது. கார் ஏற்றி கொன்று விடுவோம், தமிழக முதல்வர் எடப்பாடி வீட்டில் அம்மணமாய் போய் நிற்க வேண்டியது தானே. காவிரியில் தண்ணீர் வரும் நேரம் பார்த்து நீ ஏன் டெல்லியில் போராடுகிறாய். காவிரி தண்ணீரும் கிடையாது என்று மிரட்டுகிறார்கள். எச்.ராஜாவிற்கு வேண்டப்பட்ட பஞ்சப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து டெல்லி காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறோம். திருச்சி கமிஷனரிடமும் புகார் கொடுத்திருக்கிறோம். 10 நாட்கள் போராடி விரத்தியடைந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பரமத்திவேலூர் விவசாயி தற்போது தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் அவரை தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் . ஏற்கனவே 1இலட்சம் விவசாயிகள் கூடி டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தார்கள். தற்போது 1 கோடி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட தயார் ஆகி கொண்டுயிருக்கிறோம்.
இது பி.ஜே.பி அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்று எங்களை அடித்து விரட்ட பார்க்கிறார்கள். எங்களை தீவிரவாதிகள் என்கிறார்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் சேர்ந்து உங்களை போராட தூண்டுகிறார்கள் என்று மதரீதியாக பிரிக்க நினைக்கிறார்கள். எங்கள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்கள். அது அவ்வளவு எளிது அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார். - ஜெ.டி.ஆர்
நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக