minnabalama :கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மாணவி வளர்மதி பல்கலையில் இருந்து இன்று (ஜூலை,23) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் 102-வது நாளாக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிரா மங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 13ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்து கொண்டிருந்த போது சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது பல வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, சட்டசபையில் கேள்வி எழுப்பினார். மாணவி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததால் கைது செய்யப்பட்டார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவி வளர்மதி முதுநிலை இதழியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததைத் தொடர்ந்து, அவர் பல்கலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கதிராமங்கலம் போராட்டத்துக்கு முகநூலில் ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் குபேரன் கடந்த வியாழக்கிழமை (ஜூலை,20) கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக