வெள்ளி, 28 ஜூலை, 2017

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டு புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 
தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷாபாஸ் ஷெரீப் இருந்து வருகிறார். பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. இவர் 1990-களில் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாகவும், சில நிறுவனங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீபை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை பல கட்டமாக நடைபெற்றது வந்தது.
tamilthehindu

கருத்துகள் இல்லை: