புதன், 26 ஜூலை, 2017

பாதுகாவலர் வீட்டில் கதறி அழுத யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியன்! சுட்டவர் முன்னாள் புலி உறுப்பினர் !


கடந்த வாரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் நீதிபதி இளஞ்செழியனால் சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கையில் நன்மதிப்பு பெற்ற நீதிபதியான இவரை கொலை செய்ய அடையாளம் தெரியாத சிலர் முயன்றனர். நல்லூரில் சிக்னலுக்காக இளஞ்செழியன் சென்ற வாகனம் காத்திருந்த போது, மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீதிபதி உயிர் தப்பி விட பாதுகாவலர் சரத் பிரேமசந்திரா பலியானார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இவ்வாறான நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் முதற்தடவை என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியை நினைவு கூரும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்து.
சிங்கள பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 51 வயதுடைய சரத் ஹேமச்சந்திர என்ற பொலிஸ் சார்ஜன்ட் புகைப்படத்திற்கு மலர் வைத்து மெழுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன, மத பேதமின்றி இன்னுமொரு நபருக்காக தனது உயிரைத் தியாகம் செய்த அதிகாரி ஹேமச்சந்திர என்பவர் ஒரு வீரராகும் என, யாழ் பல்லைக்கழக மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் வெளியிடுவதாகவும், அரசாங்கம் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என யாழ் பல்லைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அஞ்சலியின் போது யாழ். பல்லைக்கழக பேராசிரியர்களின் சங்கமும் இணைந்திருந்தது.
கடந்த சனிக்கிழமை யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மர்மநபரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார்.www நேர்மை என்றும்

கருத்துகள் இல்லை: