மனுஷ்ய புத்திரன் : விமானங்களில் ஆங்கில நாளிதழ்களுடன் இந்தி நாளிதழ் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தி வெறி தலைக்கேறிவிட்டதையே இது காட்டுகிறது. மதுரை அல்லது கோவைக்கும் சென்னைக்கும் இடையே பறப்பவர்களுக்கு எதற்கு இந்தி செய்தித்தாள்?இது இந்தி பேசாத மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். நியாயமாக அந்தந்த மாநில உள்ளூர் விமானங்களில் அந்தந்த மாநில செய்தித்தாள்களுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். இது விமானத்தில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கும் பொருந்தும் .விமானப்பயணம் இன்று மத்திய தரவர்க்கத்தினருக்கும் உரியதாகிவிட்டது, விமானங்களில் பயணம் செய்யும் வர்த்தகர்கள், வயோதிகர்கள் பலருக்கும் இந்தியோ ஆங்கிலமோ தெரியாது. இது மிகவும் பாரபட்சமான ஒன்று. அந்த வகையில் விமானங்களில் தமிழ் அறிவிப்பு மற்றும் தமிழ் செய்தித்தாள்களை வலியுறுத்த வேண்டிய நேரம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக