தெலங்கானா அரசு அம்மாநில போலீஸாருக்காக 271 கோடி ரூபாய் அளவுக்கு புதிய வாகனங்களை கொள்முதல் செய்தது. இந்த வாகனங்கள் இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாங்கப்பட்டன. ஒன்று வெங்கையா நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன் நாயுடு நடத்தும் ஹர்ஷா டொயோட்டா, தெலங்கானா மாநில முதல்வரின் மகன் நடத்தும் ஹைமன்ஷு மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.வெங்கையாவின் மகள் தீபா வெங்கட்டின் என் ஜி ஓவுக்கு 2 கோடி ரூபாய் வரிசலுகை வேற
துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார்களை அடுக்கியுள்ளது.
வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டிருக்கிறார். பாஜக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ், ‘’தூய்மையான உயர்ந்த பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு தகுதியானவரா?’’ என்று கேட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
அவர் நேற்று ஜூலை 24 ஆம் தேதி டெல்லியில் அளித்த பேட்டியில் வெங்கையா நாயுடு தன் பதவியைப் பயன்படுத்தி தன் குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
’’ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஸ்வர்ண பாரத் டிரஸ்டுக்கு ஹைதராபாத் மாநகராட்சி கடந்த ஜூன் 20 ஆம் தேதி, 2 கோடி ரூபாய் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. காரணம், அந்த டிரஸ்டின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட். இந்த வரிச் சலுகை அளித்து தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெலங்கானா அரசு அம்மாநில போலீஸாருக்காக 271 கோடி ரூபாய் அளவுக்கு புதிய வாகனங்களை கொள்முதல் செய்தது. இந்த வாகனங்கள் இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாங்கப்பட்டன. ஒன்று வெங்கையா நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன் நாயுடு நடத்தும் ஹர்ஷா டொயோட்டா, தெலங்கானா மாநில முதல்வரின் மகன் நடத்தும் ஹைமன்ஷு மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மகள் நடத்தும் டிரஸ்டுக்கு வரிச் சலுகை, மகன் நடத்தும் நிறுவனத்திடம் வாகனக் கொள்முதல் இது எல்லாமே வெங்கையா நாயுடுவின் செல்வாக்கால் நடந்தவைதான்.
பிரதமர் மோடி பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை என்று சொல்லி வருகிறார்.பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை என்கிறார். ஆனால் மகளுக்கும், மகனுக்கும் சலுகை பெற்றுத் தந்த வெங்கையா நாயுடுவை உயர்ந்த துணைக் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு குஷாபாவ் தாக்கரே நினைவு அறக்கட்டளைக்கு வெங்கையா நாயுடு தலைவராக இருந்தபோது… மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சில நூறு கோடிகள் மதிப்பு கொண்ட நிலம் மிகக் குறைந்த விலைக்கு அந்த டிரஸ்டால் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட நில மோசடிப் புகார்களையும் கிளப்பியிருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வெங்கையா நாயுடு. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வெங்கையா நாயுடு,
‘’என் மகள் நடத்தும் டிரஸ்ட் என்பதால் அல்ல… இதுபோன்ற பல டிரஸ்டுகளுக்கு அவர்கள் செய்யும் சமூக சேவையின் அடிப்படையில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் இதுபோன்ற வரி விலக்குகள் நடந்திருக்கின்றன. மேலும், இதுபற்றி தெலங்கானா அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘இதுபோன்ற வரி விலக்குகள் இது முதல் முறையோ கடைசி முறையோ அல்ல… ‘ என்று விளக்கம் அளித்துள்ளது.
அடுத்து என் மகன் நடத்தும் நிறுவனம் அரசுக்கு வாகனங்கள் விற்றதாக புகார் கூறியுள்ளார். என் குழந்தைகளின் வியாபாரத்தில் நான் என்றும் தலையிட்டது கிடையாது.
மேலும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ள சில நிலம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏற்கனவே மாநில அளவில் காங்கிரசாரால் எழுப்பப்பட்டவைதான். அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவை. ஏற்கனவே எனக்கு எதிராக வைக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்ட புகார்களை மீண்டும் காங்கிரஸ் வைக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்துள்ளார் வெங்கையா நாயுடு.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக