அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில்
அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன் பிறகு `இதற்குத் தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா' படத்தின் குமுதா கேரக்டர் மூலம் பிரபலமானார். செல்வராகவன்
இயக்கத்தில் உருவான `நெஞ்சம் மறப்பதில்லை' படத்திலும் நடித்திருக்கும் இவர்
தற்போது இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகவுள்ள
`வணங்காமுடி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
பெரிதாக தமிழ் படங்கள் கமிட் ஆகாததால், தெலுங்கில் கவனம் செலுத்தினார். அதுகுறித்து, நமது மின்னம்பலத்திற்கு அளித்துள்ள பேட்டியின் கேள்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 'வணங்காமுடி' படத்தில் மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ரித்திகாசிங்கும், அவரின் தோழியாக சிம்ரனும் நடித்துள்ளார்கள். நந்திதா மதுரைப் பெண்ணாகவும் , சாந்தினி தூத்துக்குடி பெண்ணாகவும் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் தமிழரசன், கணேஷ் வெங்கட்ராமன், சிம்ரன், தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்புப் பணியும் மேற்கொள்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த ஜூன்18 ஆம் தேதி அரவிந்த்சாமி பிறந்தநாளில் சிம்பு தனது டிவிட்டரில் வெளியிட்டார். அப்போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் முதற்கட்டப் படப்படிப்பு முடிவடைந்து `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கு நடிக்கச் சென்றுவிட்டார் அரவிந்த்சாமி. மீண்டும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படம் நந்திதாவுக்கு மீண்டும் நல்ல வரவேற்பை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாப்போம்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக